அனாதை ஆசிரமத்தை மீட்கும் மூன்று குறும்புக்கார முட்டாள்கள்! - தி த்ரீ ஸ்டூஜஸ்

 

 

 

 

http://www.threestooges.com/wp-content/uploads/2016/02/threestoogesmovie-yasny.jpg
தி த்ரீ ஸ்டூஜஸ்

 

 

 

 

த்ரீ ஸடூஜஸ்


இயக்கம் ஃபாரல்லி சகோதரர்கள்

 இசை, ஜான் டெப்னி

 ஒளிப்பதிவு  மேத்யூ லெனோட்டி


மூன்று குழந்தைகளை ஒரு கார் கொண்டு வந்து ஆதரவற்றோர் காப்பகத்தில் வீசிவிட்டு செல்கிறது. அந்த மூன்று குழந்தைகள்தான் படத்தின் நாயகர்கள். கிடைக்கும் நேரத்தில் தங்களைத் தாங்களே அடித்துக்கொள்வது, மற்றவர்கள் கிடைத்தால் அவர்களை அடிப்பது என வளரும் காமெடி குழந்தைகள் அப்படியே வளர்ந்து இளைஞர்கள் ஆகிறார்கள். அந்த நேரத்தில் அவர்களது ஆதரவற்றோர் காப்பகம் விலைக்கு விற்கப்படும் சூழலைச் சந்திக்கிறது. பணம் இருந்தால் அதனை மீட்டுவிடலாம். அதற்கு, இந்த மூவரும் என்ன செய்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.


படம் முழுக்க உடல்மொழி, வசனம் சார்ந்த காமெடி திரையை அதிர வைக்கிறது. மூவருமே நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள். டாம் அண்ட் ஜெர்ரி காமெடி போன்ற உடல்மொழியை மூவரும் கொண்டிருக்கிறார்கள். இதனால் ஒருகட்டத்திற்கு மேல் நாம் படத்தின் கதையை தூரமாக வைத்துவிட்டு அவர்களை அப்படியே பின்பற்றத்தொடங்கிவிடுகிறோம்.


மனச்சோர்வு, மன அழுத்தம் போக கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம்.


கோமாளிமேடை டீம்





கருத்துகள்

பிரபலமான இடுகைகள்