பரவும் டிஜிட்டல் கரன்சி மோகம்! - இந்திய ரிசர்வ் வங்கி அனுமதிக்குமா?

 

 

 

 

Currency, Bitcoin, Cryptocurrency, Payment, Network
cc

 

 

 

பரவும் டிஜிட்டல் கரன்சி மோகம்!

இந்திய ரிசர்வ் வங்கியின் மே மாத இதழில் டிஜிட்டல் கரன்சி பற்றிய ஆய்வு வெளிவந்துள்ளது.

ஒய்.வி. ரெட்டி போன்ற முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்கள் இதழின் ஆலோசனைக் குழுவில் இருக்கும் நிலையில், இந்த ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியா, டிஜிட்டல் கரன்சிகளை இன்றுவரை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை.

பிப்ரவரியில் நடத்தப்பட்ட ஆய்வு, டிஜிட்டல் கரன்சிகளின் எதிர்காலம், பிற நாடுகள் அதனை எப்படி உருவாக்கி வருகின்றன என்பதை விவரித்தது. கிரிப்டோகரன்சிகள் பெரும்பாலும் முறைப்படுத்தப்படாதவை. இவை கிரிப்டோகிராபி மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன. டிஎல்டி தொழில்நுட்பம் மூலம் கிரிப்டோகரன்சிகளின் செயல்பாடுகளை அறியமுடியும். பல்வேறு நாடுகள் தொடங்கி ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தள நிறுவனம் (லிப்ரா குளோபல்) கூட இதில் ஆர்வம் காட்டுகிறது.

ஜப்பான், டிஜிட்டல் கரன்சி பற்றிய பணிகளைத் தொடங்கிவிட்டது. இந்தியா இன்று இல்லையென்றாலும் இன்னும் சில ஆண்டுகளில் டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்த தொடங்கும்” என்கிறார் ரிசர்வ் வங்கியின் முன்னாள் இயக்க்குநரான டி.பத்மநாபன். வங்கி முறை, வங்கி முறையற்ற பணப்பரிமாற்றம் இந்தியாவில் உள்ளது. இந்நிலையில் டிஜிட்டல் கரன்சி என்பதை இந்தியாவில் அறிமுகம் செய்வது கடினமாகவே இருக்கும். காரணம், இதன் தொழில்நுட்ப பிரச்னைகள்தான்.

2009ஆம் ஆண்டு உலகில் அறிமுகமான பிட்காயின் அக்காலகட்ட பொருளாதார நெருக்கடியில் பிரபலமானது. ஆனால் இதன் தொழில்நுட்பம் பற்றி 2013ஆம்ஆண்டு ரிசர்வ் வங்கி மக்களை எச்சரித்தது. 2017இல் வங்கிகள், நிதிநிறுவனங்கள் டிஜிட்டல் கரன்சியை வாங்க விற்க கூடாது என தடை விதித்தது. ஆனால் இதனை சட்டவிரோதம் என்று கூறவில்லை. மையப்படுத்தாத டிஜிட்டல் கரன்சிகளை கட்டுப்படுத்தி வங்கிகளை காக்கும் முறை என்றும் இதனை கருதலாம். தற்போது பிட்காயின்களை பரிமாற்றம் செய்ய வங்கிக்கணக்கு தேவை. மலிவான சேவைக்கட்டணம், பயனருக்கான சுதந்திரம் என்ற வகையில் டிஜிட்டல் கரன்சிகளை ஒதுக்க முடியாது என்பது உண்மை.

தகவல்: பிஸினஸ்டுடே


கருத்துகள்