இதயத்தால் பணிபுரிந்தால் வெற்றி நிச்சயம் - கைனாஸ் கர்மாகர்

 

 

 

 

 

The Gillette ad represents society ‘taking a step forward ...

 

 

 இம்பேக்ட் 50, சாதனைப் பெண்கள்

கைனாஸ் கர்மாகர்

ஆகில்வி விளம்பர நிறுவனம், இயக்குநர்

கைனால்ஸ் கர்மாகருக்கு கிடைத்த வேலைவாய்ப்பு அனைத்துமே பலரும் ஆசைப்படும் நிறுவனங்கள்தான் ஆனால் அதனை அவர் அதிர்ஷ்டவசமாக அடையவில்லை. அவர் அதற்கான வழிகளில் கடினமான உழைத்திருக்கிறார். அப்படி உழைத்து களைத்து தூங்கும்போதுதான் அவருக்கு பல்வேறு வேலை வாய்ப்புகள் கதவை தட்டியிருக்கின்றன. கைனாஸ் தனது தூக்கத்தை எப்போதும் இழக்க விரும்பாதவர்தான். ஆனால்  இரண்டாம் முறை அலைபேசி ஒலித்தபோது அவர் தூக்கம் கலைந்து அதனை எடுத்து பேசினார். அதனால்தான் நாம் அவரைப் பற்றி இங்கு எழுதிக்கொண்டிருக்கிறோம். 2010ஆம் ஆண்டு ஆகில்வி விளம்பர நிறுவனத்திற்குள் காலடி எடுத்து வைத்தார். 2017ஆம் ஆண்டு நிறுவனத்தின் முக்கியமான இயக்குநராக அறியப்பட்டார். 2020ஆம் ஆண்டு நிறுவனத்தின் மூன்று முக்கியமான கிரியேட்டிவ் இயக்குநர்களில் அவரும் ஒருவர். ப்ரூக் பாண்ட் நிறுவனத்திற்காக அவர் விளம்பர வாசகம் ஒன்றை உருவாக்கினார். ரெட்லேபிள் என்ற டீபிராண்டிற்காக டேஸ்ட் ஆப் டுகெதர்னெஸ் என்று இவரின் மூளை உருவாக்கிய ஐடியா சந்தையில் நிறுவனத்தை புகழ்பெற வைத்துவிட்டது. கூடவே 2019ஆம் ஆண்டிற்காக எஃபி கோல்டு விருதும் கிடைத்தது. இவரின் முயற்சியால் நிறுவனத்திற்கு கிளினிக் பிளஸ், கெலாக்ஸ் நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் ஆனார்கள். யுனிலீவர் நிறுவனத்திற்காக தி ஷவர் என்ற விளம்பர படத்தை விழிப்புணர்வுக்காக கைனாஸ் கர்மாகர் எடுத்தார். அப்படம் ஆலிவ் க்ளவுன் விருது வென்றதோடு  அமெரிக்கா, கொரியா ஆகிய நாடுகளில் திரையிடப்பட்டு பல்வேறு விருதுகளை வென்றது. இன்று பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடமாக திரையிடப்பட்டுவருகிறது. இந்த விழிப்புணர்வு படம், நீர் சிக்கனத்தை வலியுறுத்தியது. நாற்பதுக்கும் அதிகமாக விருதுகளைப் பெற்றவர் கைனாஸ் கர்மாகர். விளம்பரங்களை எப்படி உருவாக்குவது என்பது பற்றி மாணவர்களுக்கு கற்றும் கொடுத்து வருகிறார். தனக்கு கிடைத்த விருதுகள் நிறுவனத்திற்கு மட்டுமல்ல தனக்கும் முக்கியம் என்றே கைனாஸ் கருதுகிறார். காரணம், அவை குறிப்பிட்ட பிரச்னையைப் பற்றி பேசுபவை அதனால் அவை மக்களிடையே கவனம் பெறும் என்கிறார். பெரும்பாலும் கைனாஸ் ஏதாவது வேலை செய்துகொண்டு இருப்பவர்தான். ஓய்வாக இருக்கும்போது வீட்டின் அருகிலுள்ள கஃபே ஒன்றுக்கு செல்வது வழக்கம். வூடி ஆலனின் படங்களை பார்த்து ரசிப்பதும், காப்ரியல் கார்சியா மார்க்வெஸ் நாவல்களை படிப்பதும் இவருக்கு பிடித்தமானவை.  மூளையில் ஐடியாக்கள் கிடைத்தாலும் அதனை இதயத்தால் பார்த்து புரிந்துகொண்டு வேலை செய்யுங்கள் என்று தனது குழுவினருக்கு கைனாஸ் கூறுவது வழக்கம். அவர் வெற்றியாளராக எப்படி இருக்கிறார் என்று இப்போது தெரிகிறதா?


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்