கட்டணசேவையில் காதலைச் சேர்த்து வைக்கும் டேட்டிங் டாக்டர்! - ஹிட்ச்
ஹிட்ச் - வில்ஸ்மித் |
ஹிட்ச்
கல்யாணம் செய்துகொள்ளவேண்டும் என்று விரும்புகிற ஆண்களை, அவர்கள் விரும்புகிற பெண்களை அணுகுவதற்கான திட்டங்களை போட்டுத்தரும் டேட்டிங் டாக்டர் தான் ஹிட்ச். அவரின் தொழில்வாழ்க்கை, சொந்த வாழ்க்கை இரண்டையும் படம் கூறுகிறது.
ஹிட்ச்சைப் பொறுத்தவரை அவர் தன்னை விளம்பரம் செய்துகொள்ளாமல் வாய்வழி விளம்பரம் மூலமே பிறருக்கு அறிமுகமாகிறார். அவர் செய்வது கட்டண காதல் சேவைதான். ஆனால் அதில் சில கொள்கைகளை கடைபிடிக்கிறார். உ்ணமையில் ஒரு பெண்ணை காதலிக்கவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மட்டுமே உதவுகிறார். ஒரு இரவு என்று வருபவர்களை ஸ்லிப்பரால் அடித்து விரட்டிவிடுகிறார்.
அவருக்கே சவாலாக வருகிறான் ஆல்பர்ட். செய்யும் அனைத்து விஷயங்களையும் சாதாரணமாகவே சொதப்புபவன், காதலில் மட்டும் மிச்சம் வைப்பானேன்? இதனால் இளம்பெண்கள் மட்டுமல்ல ஆன்டி கூட அவன் பக்கத்தில் வருவதில்லை. அவனை ஒரு எக்ஸ்பரிமெண்டாக எடுத்துக்கொண்டு ஹிட்ச் காதலிக்க அட்வைஸ் கொடுக்கிறார். ஆல்பர்டுக்கு அலிகிரா என்ற பெண் தொழிலதிபர் மீது பேராசை. ஆனால் அவளை நேரடியாக அணுகி பேச முடியாது. அவளுக்கு நிதிநிறுவன ஆலோசனைகளை சொல்லும் நிறுவனத்தில் ஆல்பர்ட் இருக்கிறான். அலிராவைப் பற்றி தோண்டித்துருவி ஹிட்ச் செய்யும் ஆராய்ச்சிகள்தான் படத்தின் உயிர்நாடி.
எப்படி ஆன்டனி ஒவ்வொன்றாக சொல்லச்சொல்ல நீயா நானாவில் கோபிநாத் கேள்விகளை கேட்கிறாரோ அதே கான்செப்ட்தான். அதிலும் கோபிநாத் கிரியேட்டிவிட்டியாக யோசித்து சில சமாச்சாரங்களை சேர்த்து பேச செம ஹிட் அடித்தார். அதேதான். காதலிலும் நடக்கும். சூழலுக்கு ஏற்றாற்போல சில விஷயங்களை ஆல்பர்ட் செய்யவேண்டுமென சொல்கிறார் ஹிட்ச். ஆனால் ஆல்பர்ட் அனைத்தையும் அவரது ஸ்டைலில் செய்து காதலிக்கிறார். காதலி நெருங்கும்போது, ஹிட்சின் வாழ்க்கையிலும் காதல் பூங்காற்று வீசுகிறது. பத்திரிகையில் வேலை பார்க்கும் ரிப்போர்ட்டரை மடக்குகிறார். காதலிப்பவர்கள் செய்வதற்கு எதிர்ப்பதமாக செய்து அவளை ஈர்க்கிறார். அவளுக்கு ஆண்கள் என்றால் இன்பத்திற்காக வருபவர்கள்தான். பெண்களை தூக்கியெறிந்துவிட்டு போய்விடுவார்கள் என அழுத்தமாக நம்புகிறாள். அவளை எப்படி ஹிட்ச் மாற்றுகிறார் என்பது படத்தின் இன்னொரு கதை.
பிற படங்களிலிருந்து இந்த படம் வேறுபடுவது, அதன் உணர்ச்சிகரமான காட்சிகளால்தான். வாய்ப்பு கிடைத்தால் படத்தைப் பாருங்கள்.
கட்டணசேவை காதல்!
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக