பள்ளியை மாற்றிய ஆசிரியர்! -பீகாரைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் அகிலேஸ்வர் பதக்
பள்ளி ஆசிரியர் அகிலேஸ்வர் பதக்
பள்ளியை மாற்றிய ஆசிரியர்
பீகாரைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் அகிலேஸ்வர் பதக், 2020ஆம் ஆண்டிற்கான நல்லாசிரியர் விருதை வாங்கியுள்ளார். பீகாரிலுள்ள சரண் மாவட்டைச்சேர்ந்த சன்புரா பைஸ்மாரா நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இவர். என்ன செய்தார் என்று இவருக்கு நல்லாசிரியர் விருது? இந்த அரசுப்பள்ளிக்கு மாற்றலாகி வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. முதலில் வந்தபோது பள்ளிக்கு சுற்றுச்சுவர், கழிவறை குடிக்க குடிநீர் என எந்த வசதியும் இல்லை என்பதைக் கவனித்தார். இதனால் அங்குள்ள மக்களை சந்தித்தார் அவர்களிடம் பள்ளியின் நிலையைச் சொல்லி நிதியுதவியைக்கேட்டார். அவர்கள் மூலம் 98 ஆயிரம் ரூபாய் நன்கொடை கிடைத்துது. தனது சேமிப்பிலிருந்து 21 ஆயிரம் ரூபாயை அதில் தன் சார்பில் கொடு்த்தார். பள்ளி ஆசிரியர்கள் ஒன்றாக சேர்ந்து 5 ஆயிரம் ரூபாய் தந்தனர். இதன் காரணமாக இன்று பள்ளியில் சிசிடிவி கேமரா உள்ளது. சாப்பிடுவதற்கான அறை உள்ளது. மாணவர்களுக்கான வருகைப்பதிவு முறை டிஜிட்டலாக மாற்றப்பட்டுள்ளது.
பள்ளிகளில் மாணவிகள் எண்ணிக்கை குறைந்து வந்தது. அப்படி வந்தவர்களும் கழிவறை இல்லாத காரணத்தால் மல,ஜல உந்துதலை கட்டுப்படுத்திக்கொண்டு அவதிப்பட்டனர். இதன்காரணமாக நான்கு கழிவறைகளைக் கட்டி அவற்றில் இரண்டை மாணவர்களுக்கும் இரண்டை மாணவிகளுக்கும் ஒதுக்கிறார். 533 பேர் என்று இருந்த மாணவ, மாணவியரின் எண்ணிக்கை இன்று 700க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
மக்கள் கொடுத்த நன்கொடை மூலம் புரஜெக்டர்கள் வாங்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாற்றங்களுக்காக மெனக்கெட்ட தலைமை ஆசிரியர் அகிலேஷ்வர் பதக் அவர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது பொருத்தமானதுதானே?
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
ராஜேஷ் குமார் தாக்கூர்
பீகார், நல்லாசிரியர் 2020, கழிவறை, குடிநீர், நன்கொடை, மக்கள், அகிலேஷ்வர் பதக்
கருத்துகள்
கருத்துரையிடுக