கார்பன் இல்லாத உலகை அணு உலைகள் மூலம் உருவாக்கலாம்!
cc |
எதிர்காலம் இப்படித்தான்!
கார்பன் இல்லாத உலகை அணு உலைகள் மூலம் உருவாக்கலாம்.
பலருக்கும் இப்படி ஒரு தலைப்பைக் கேட்டதும் எப்படி சாத்தியம் என்ற கேள்வி எழும். ஆனால் உண்மையில் கார்பனைக் குறைக்கும் திட்டத்தில் அணுஉலைகள் நிறைய உதவ முடியும். பொதுவாக ஜேம்ஸ்பாண்ட் படங்களில் பார்த்தால் பிரிட்டன், அ்மெரிக்காவிற்கு எதிராக ரஷ்யா அணு உலை திட்டங்களை செய்துகொண்டிருக்கும். அணுஉலைகள் என்பதன் மறைவில் புளுட்டோனியம், யுரேனியம் ஆகியவற்றை செறிவூட்டி அணுகுண்டுகளை தயாரிக்கிறார்கள் என்று கூறுவார்கள். ஆனால் இந்த கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை. ஆணால் மேற்சொன்னவற்றுக்கு மாற்றாக தோரியத்தை ரியாக்டர்களாக பயன்படுத்தும் போக்கு மெல்ல தொடங்கி வருகிறது. ஏன், இந்தியாவில் கூட இந்த செயல்பாடு 2018ஆம் ஆண்டு தொடங்கியது.
சூரியனில் எப்படி வெப்பம் உருவாகிறது? அணுக்கள் பிளவுபடுவதனால்தான். அந்த கான்செப்ட்தான் தோரியம் ரியாக்டர்களிடம் நடைபெற வைக்க முயல்கிறார்கள். இதற்கான முயற்சி அமெரிக்காவின் கலிபோர்னியாவிலும், பிரான்சிலும் நடைபெற்று வருகிறது. இந்த முயற்சி வெற்றிபெற்றால் மாசு இல்லாத ஆற்றல் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
மிதக்கும் சோலார் பேனல்கள்
இன்று இந்தியா சோலார் பேனல்கள் சார்ந்த விற்பனை, பயன்படுத்துதலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இதனை நிலத்தில் நிறுவி பயன்படுத்துவது இப்போதுதான் இங்கு தொ டங்கியுள்ளது. சோலார் பேனல் முழுக்க சூரியனின் சக்தி மூலம் செயல்படுவது. கார்பன் வெளியீடு போன்ற பிரச்னைகள் இல்லாத முறை என உறுதியாக சொல்லலாம். ஆனால் நிலத்தில் சோலார் பேனல்களை வைத்தால் மக்கள் எங்கே வாழ்வது என ஏகப்பட்ட கேள்விகள் எழுந்தன. நமது ஊரில் இன்னும் அந்த கேள்விகள் புகார்கள் வரவில்லை. கேள்விகள் கேட்கப்பட்டது, இங்கிலாந்தில். எனவே அங்கு நீர்நிலைகளில் சோலார் பேனல்களை அமைக்கிறார்கள். இதனால் நிலங்கள் வீணாகிறது. நமக்கும் தேவையான ஆற்றல் கிடைக்கும், மின்சார கட்டணம் குறையும். இங்கிலாந்தில் நிலங்களுக்கு மதிப்பு அதிகம். எனவே நீர்நிலைகளில் அமைத்தனர். பெர்க்ஷையர் எனும் இடத்தில் இப்படி சோலார் பேன்ல்களை அமைத்துள்ளனர்.
ஜப்பானைச் சேர்ந்த கியோசெரா என்ற நிறுவனம் இரண்டு ஏரிகளில் 11 ஆயிரம் சோலார் பேனல்களை நிறுவும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்மூலம் 2.9வாட் மின்சாரம் கிடைக்கும். இதை வைத்து ஆயிரம் வீடுகள் மின்சாரத்தை பயன்படுத்த முடியும்.
குப்பைகள் மூலம் மின்சாரம்
ஸ்வீடன் நாட்டில் பிற நாடுகளிலிருந்து குப்பைகளை பெற்று அதனை எரித்து மின்சாரம் மற்றும் வெப்பத்தைப் பெறுகின்றனர். இதனால் அங்குள்ள வீடுகளில், நகரங்களில் பெரும்பாலும் தடையில்லாத மின்சாரம், வெப்பம் கிடைக்கிறது. மேலும் மின்சாரம் தயாரிக்கும் மரபான முறைகளை விட ஸ்வீடனின் இந்த டெக்னிக் அந்நாட்டிற்கு சிறப்பான பயன்களைத் தந்துள்ளது.
உலகில் 70 சதவீதம் கடல் நீர்தான் உள்ளது. அதன் அலைகளிலிருந்து மின்சாரம் தயாரிக்க முடியுமே என்று தோன்றிய யோசனையை செயல்படுத்தியது, இங்கிலாந்துக்கார ர்கள்தான். பொதுவாக கடல் அலைகள் மூலம் நாட்டின் பாதி மின்சாரத்தேவையை பெற்றுவிட முடியும். இங்கிலாந்தின் ஸ்வான்சீ கடற்பகுதியில் மின்சாரம் தயாரிக்கும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஈகோ வேவ் பவர் என்ற நிறுவனமும் மின்சாரம் தயாரிக்க ஏதுவான அமைப்புகளை உருவாக்கி வருகிறது. ஹவாய் போன்ற நாடுகளில் கடல்நீரின் வெப்பநிலை மூலம் மின்சாரம் தயாரிக்க முடியுமா என்று ஆராய்ந்து வருகிறார்கள்.
bbc
கருத்துகள்
கருத்துரையிடுக