என்னுடைய காதலி யார் என்று தெரியுமா? லெட் மீ இன்

 

‎Let Me In (2010) directed by Matt Reeves • Reviews, film ...
லெட் மீ இன்

 

 

 


லெட் மீ இன் 

 Directed byMatt Reeves

Screenplay byMatt Reeves
Based onLet the Right One In
by John Ajvide Lindqvist

 

Music byMichael Giacchino
CinematographyGreig Fraser

 

Let Me In Trailer
லெட் மீ இன்



2008ஆம் ஆண்டு வந்த ஸ்வீடன் படத்தை ஆங்கிலத்தில் ரீமேக் செய்திருக்கிறார்கள். லெட் தி ரைட் ஒன் இன் என்பதுதான் மூலப்படம். நியூ மெக்சிகோவின் லாஸ் அலமோஸில் 1980ஆம் ஆண்டு நடைபெறுகிறது படம்.

12 வயது மகிழ்ச்சியில்லாத சிறுவன், ஓவன். அவனது பெற்றோர் விவகாரத்து பெற்றுவிட அம்மாவிடம் வளர்கிறான். பள்ளியில் அவனை அவனது வகுப்பு மாணவர்கள் மூவர் எப்போது அடித்து துன்புறுத்திக்கொண்டே இருக்கிறார்கள். இந்த நிலையில் அவன் வாழும் அபார்ட்மெண்டிற்கு அபி என்ற 12 வயது சிறுமி வருகிறாள். ஓவன், அடிக்கடி டெலஸ்கோப்பில் பக்கத்து வீட்டு  சரச சல்லாபங்களை பார்த்து நமக்கும் ஒரு பெண்தோழி இருந்தால் என கனவில் இருக்கிறான் சரியான அபி அவர்களது கட்டடத்திற்கு வர ஆஹா.. என மகிழ்கிறான். ஆனால் முதல் பேச்சிலேயே அபி நாம் நண்பர்களாக இருக்க முடியாது என மறுக்கிறாள். பின்னாளில் அவன் அவனை விரும்பி நட்புகொள்கிறாள். பகல் முழுவதும் வெளியே வராமல் இரவில் மட்டும்தான் அவனை சந்திக்க வருவாள். அபி மற்று்ம் அவளது தந்தை அங்கு தங்கியிருக்கிறார்கள். அவர்கள் வந்த சிறிது நாட்களில் அங்கு நிறைய கொலைகள் நடைபெறுகின்றன. இதற்கு காரணம் என்ற என்று டிடெக்டிவ் ஒருவர் கண்டுபிடிக்க முயல்கிறார். உண்மையில் அபி யார், அவள் எங்கிருந்து வந்தாள், அவள் ஏன் இரவில் மட்டும் ஓவனை சந்திக்க வருகிறாள் என்பதுதான் முக்கியமான திருப்புமுனை  சமாச்சாரம். அதுதான் முக்கியமான கதையும் கூட.

ஓவனாக  கோடி ஸ்மித் மெக் பீ, அபியாக குளோ கிரேஸ் மோரெட்ஸ் ஆகியோர் பிரமாதமாக நடித்திருக்கிறார்கள். அபி யார் என்று அறிந்தாலும் அவள் மீதான காதலை ஓவனால் மறைக்க முடியாமல் கட்டிக்கொள்ளும் காட்சி, கம் இன் சொல்லாமல் மௌனம் சாதிப்பது, பின்னர் அதற்கு அபியிடம் மன்னிப்பு கேட்பது நெகிழ்ச்சியான காட்சிகள் படத்தில் நிறைய உள்ளன.

நட்பிற்காக தன்னையே பணயம் வைப்பதுதான் படத்தின் முடிவு.

நட்பே துணை

கோமாளிமேடை டீம் 



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்