அகதிப் பெற்றோருக்கு நிம்மதி தேடி தந்தவர், புலனாய்வு செய்திகளில் சாதனை படைத்தவர்
மிரியன் ஜி
பிரிந்த குடும்பங்களை ஒன்றாக சேர்க்க பாடுபட்டவர்
2018ஆம் ஆண்டு மெக்சிகோ - அமெரிக்கா எல்லையில் 2700க்கும் மேற்பட்ட குழந்தைகளை ஆதரவற்று நின்றனர். அரசு பெற்றோர்களையும் குழந்தைகளையும் பலவந்தமாக பிடித்து தனி முகாம்களின் அடைத்து விசாரணை செய்து வந்தது. அதில் மாட்டியவர்தன் மிரியன். இவர் வைத்திருந்த 18மாத குழந்தையை அமெரிக்க குடிமைத்துறை அதிகாரிகள் பிடிங்கிக்கொண்டனர். அ்ந்த குழந்தைக்கும் தனது அம்மாவிடமிருந்து தன்னை எதற்கு பிரிக்கிறார்கள் என்று தெரியவில்லை. மிரியன், தனது வாழ்க்கை அமெரிக்காவில் நன்றாக இருக்கும் என்று நம்பி வந்தவர். ஒரு மாதம் 11 நாட்கள் கழித்து அவருக்கு, அவருடைய குழந்தை வழங்கப்பட்டது. அத்தோடு அவர் நின்றிருந்தால் நாம் அவரைப் பற்றி பேசவேண்டி வந்திருக்காது. அமெரிக்க அரசு குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரித்து தனிமைப்படுத்துவதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். சிஎன்என் டிவியிலும் இதுபற்றி பேசினார். பல்வேறு பிரபலங்கள் இதுபற்றி தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். நீதிமன்றம் அமெரிக்க அரசின் நடவடிக்கையை கண்டித்து குழந்தைகளையும் பெற்றோர்களையும் பிரிக்க கூடாது என உத்தரவிட்டது. அமெரிக்க குடிமகனான எனது அரசின் நடவடிக்கைகள் எனக்கு பிடிக்கவில்லை. இந்த அநீதியை எதிர்த்து போரிட்ட மிரியனை நான் வரவேற்கிறேன். எங்களது தேசத்திற்கு உங்களைப்போன்றோரின் துணிச்சல் தேவைப்படுகிறது.
குணால் நாஞ்சியானி
மரியா ரெஸ்ஸா
பிலிப்பைன்ஸ் - அமெரிக்க செய்தியாளர். இருபது ஆண்டுகளாக தென்கிழக்கு ஆசியாவிற்கான புலனாய்வு செய்தியாளராக சிஎன்என் டிவியில் பணிபுரிந்தவர். பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலாவில் 1963ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி பிறந்தவர். டைம் பத்திரிகையில் 2018ஆம் ஆண்டுக்கான சிறந்த மனிதர் விருதைப் பெற்றிருக்கிறார். இந்த விருதைப் பெற்றவர்கள் பலர் இறந்துபோயிருக்கிறார்கள், கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். சிறைப்பட்டிருக்கிறார்கள். இப்படி ஏதும் நேராமல் விருது வென்ற சாதனையாளர் இவர்தான். அதற்காக உடலில் சிறு கீறல் கூட இல்லாமல் எப்படி சாதனை செய்ய முடியும்? பலமுறை அரசுகளால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணை மூலம் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் ராப்லர் என்ற வலைத்தள செய்தி நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அதிபர் டியூடெர்டே அரசு செய்த பல்வேறு ஊழல்களை தைரியமாக வெளிப்படுத்தினார். அடுத்து என்ன நடக்கும்? அவரது செய்தி நிறுவனம் மீது வரி ஏய்ப்பு புகார் கொடுக்கப்பட்டது. இதற்காக மரியா கைது செய்யப்பட்டார். அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல் பணி செய்து வருகிறார். நாம் பத்திரிகையாளர்கள். நாம் யாருக்காகவும் பயப்படக்கூடாது. ஒளியில் ஒளிரவேண்டும். அதனை எப்போதும் மறந்துவிடக்கூடாது என்று பேசினார். மரியா அப்படித்தான் செயல்பட்டு வருகிறார்.
மேடலின் ஆல்பிரைட்
டைம்
கருத்துகள்
கருத்துரையிடுக