இம்பேக்ட் 50! சாதனைப் பெண்கள் - மகாராஷ்டிரத்தில் முன்மாதிரி கிராமங்களை உருவாக்கிய பெண்மணி - பிரியா நாயர்

 

 

 

 

https://smedia2.intoday.in/btmt/images/stories/priya-nair-660_091015045908.jpg
பிரியா நாயர், யுனிலீவர்

 

 

 

 

 

இம்பேக்ட் 50

சாதனைப் பெண்கள்

பிரியா நாயர்

யுனிலீவர், அழகுசாதனப் பொருட்கள் துறை இயக்குநர்

47 வயதாகும் பிரியா நாயர், யுனிலீவர் நிறுவனத்தின் அழகு சாதனப் பொருட்களுக்கான இயக்குநர் ஆவார். 1995ஆம் ஆண்டு முதல் இந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்தியா பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளில் யுனிலீவர் செய்யும் வணிகத்தில் பிரியா நாயருக்கு முக்கியமான பங்களிப்பு உண்டு. இவர் உருவாக்கி வாஷ் என்ற விழிப்புணர்வு திட்டம் பலகோடி மக்களிடையே யுனிலீவரின் பொருட்களை கொண்டுபோய் சேர்த்தது. ஸ்வட்ச் ஆதத் ஸ்வட்ச் பாரத் திட்டத்தின் மூலம் கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவது, தூய்மையான குடிநீரை அருந்துவது, சுத்தமான கழிவறையைப் பயன்படுத்துவது ஆகியவற்றை பிரசாரம் செய்தார் நிதிஆயோக் அமைப்பின் மாற்றங்களை உருவாக்குபவர் என்ற தலைப்பின் கீழ் பேசுவதற்கு அழைக்கப்பட்ட பெருமைக்குரியவர் பிரியா நாயர். பிஸினஸ் டுடே, பார்ச்சூன் ஆகிய இதழ்களில் இவரைப் பாராட்டி பல்வேறு கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.

தற்போது வகிக்கும் பதவிக்கு முன்னதாக கன்ஸ்யூமர் இன்சைட்ஸ் எனும் குழுவில் பணியாற்றினார்.  அப்பணியின்போது டவ், ஆக்ஸ், ரெக்சோனா, குளோஸ்அப், பெப்சோடென்ட் ஆகிய பிரணாடுகளை பிரபலப்படுத்து உழைத்துள்ளார். இவரது தலைமையின் கீழ் அழகு சாதனப்பொருட்களை இரட்ட இலக்க விற்பனையைப் பெற்று சாதித்தன. துணிகளை வெளுக்கும் சலவைத்தூளை மாற்றம் செய்து திரவமாக மாற்றி விற்பனை செய்து புதுமை செய்த நவீன வணிக பாணி இவருடையது. கம்போர்ட் எனும் பிராண்டை உருவாக்கியவரும் இவரே.

மகராஷ்டிர மாநிலத்தில் ஆயிரம் முன்மாதிரி கிராமங்களை  உருவாக்கும் பொறுப்பில் அரசுடன் இணைந்து பிரியா நாயர் செயல்பட்டுள்ளார்.
 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்