ஆப்ரோ அமெரிக்கர்களுக்கு ஆதரவாக திரைப்படங்கள் மூலம் போராடும் இயக்குநர்! - ஸ்பைக் லீ

 

https://www.thewrap.com/wp-content/uploads/2019/02/Spike-Lee-shot-by-Matt-Sayles.jpg
இயக்குநர் ஸ்பைக்லீ

 

 

 

 

ஸ்பைக்லீ


இயக்குநர் ஸ்பைக்லீ பற்றி ஒற்றை வார்த்தையில் என்ன சொல்லுவது? அவர் ஒரு டஜன் படங்களுக்கு மேல் இயக்கிவிட்டார். அனைத்து படங்களும் வெவ்வேறு விதமான வகைகளைச் சேர்ந்தவை. எனக்கு அவர் நேரத்தை மிகச்சரியாக பயன்படுத்தி வேலை செய்வது பிடித்தமானது. 1992ஆம் ஆண்டு மால்கம் எக்ஸ் என்ற படம் வெளியானது. படம் வெளியான சில மாதங்களுக்குப் பிறகு இனவெறி சார்ந்த தாக்குதல் ஆப்ரோ அமெரிக்கர்கள் மீது அதிகரித்தது. ஸ்பைக் லீ எடுத்த பிளாக் கிளான்ஸ்மேன் படம், சார்லட்ஸ்வில்லே பகுதியில் நடந்த இனவெறி தாக்குதலை மையப்படுத்தியது. நியூயார்க்கில் வர்த்தக மையத்தில் ந டந்த தீவிரவாத தாக்குதலை இவரின் 25 ஹவர் என்ற படம் மையப்படுத்தி பேசியது. அப்போது அப்படி ஒரு படத்தை உருவாக்க யாருக்குமே தோன்றவில்லை என்பதுதான் உண்மை.


வெள்ளையர்களுக்கு ஆப்ரோ அமெரிக்கர்கள் மீதுள்ள இனவெறி வெறுப்பிற்கு எதிராக தனது படங்களின் மூலம் ஸ்பைக்லீ போராடுகிறார் என்றே சொல்லவேண்டும். அதன் வழியாக வரலாற்றிலும் தாக்கம் செலுத்துகிறார் ஸ்பைக் லீ.


ஜோர்டன் பீலே



கருத்துகள்