எதிர்காலத்தில் நாம் வாழும் வீடுகளில் இந்த வசதிகள் கண்டிப்பாக இருக்கும்! - என்னென்ன வசதிகள் தெரியுமா?

 

 

 

 

Smart Home, House, Technology, Multimedia, Smartphone
cc

 

 

 


 

வீடு


தூக்கம் என்பது இனி மாறும். முதலில் சாப்பிட்டுவிட்டு வெளிச்சம் வரும் ஜன்னலின் திரையை இழுத்துவிட்டால் போதும். ஆனால் இனிமேல் உங்களை தூக்கத்தை ஸ்மார்ட் மெத்தைகளே பார்த்துக்கொள்ளும். உடலின் தூக்கம் கலையாதவாறு வெளியில் மழை பெய்தால் அதற்கேற்ப படுக்கை வெப்பமாகும். வறண்ட காற்று வீசினால் படுக்கை அதற்கேற்ப நெகிழ்ந்துகொடுத்து தூங்க வைக்கும். அறை புழுங்கினால், படுக்கை குளிர்ந்த தன்மைக்கு மாறும். படுக்கையில் படுக்கும் தம்பதியர் இருவரின் தூக்கங்களையும் தனித்தனியாக கண்காணிக்க முடியும் என்பது சிறப்பு. மேலும் விளக்குகள் சூழ்நிலைக்கேற்ப நிறத்தை மாற்றிக்கொள்ள முடியும். படுக்கை அறையை வெளிப்புறத்தில் உள்ள ஒலிகள் பாதிக்காதவாறு சவுண்ட்ப்ரூப் அல்லது இரைச்சல் குறைப்பு வசதிகள் செய்துகொள்ளும் வாய்ப்பும் கூடிவரும்.


மேசை நாற்காலிகள்


இவை அனைத்திலும் வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்துகொள்ளும் வசதிகள் உண்டு. ஐகியா என்ற நிறுவனம் ஏற்கெனவே இந்த வசதியை செய்து மேசைகளை விற்று வருகிறது. ஸ்டார்பக்ஸ் நிறுவனம் தனது கடைகளில் இந்த வசதியை செய்து வருகிறது.


கண்ணாடி


இனி பாத்ரூம் கண்ணாடியில் கூட தந்தியின் கள்ளக்காதல் செய்திகளை பல் துலக்கியபடி படிக்கலாம். கூகுள் நியூஸ் போன்றவற்றுக்கு சப்ஸ்கிரைப் செய்தால், உங்களுக்கான செய்திகள் லைன் கட்டி நிற்கும். அதனை ஐந்து நிமிடத்தில் கடகடவென படித்துவிட்டு, ஆபீசுக்கு, பார்ட்டிக்கு எந்த டிரெஸ் சரியாக இருக்கும் என்பதை விர்ச்சுவலாகவே கண்ணாடியில் உள்ள கேமராக்கள் மூலம் செக் செய்துவிட்டு சந்தோஷமாகலாம்.


குளியலறை


ஷவரில் வரும் நீரை 70 சதவீதம் சேமிக்க நெபியா ஷவர் நிறுவனம் திட்டம் போட்டுள்ளது. எனவே குளிக்கும் சந்தோஷமும் போகாது. நீங்கள் அதற்காக அதிக செலவு செய்யும்படியும் இருக்காது. கழிவறையைப் பொறுத்தவரை அதில் கழிவு, நீர் என அனைத்தும் வீண் என்றே பலரும் நினைக்கிறார்கள். பில்கேட்ஸ் அவற்றை மறுசுழற்சி செய்து பயன்படுத்தலாம் என்று சொல்லியிருக்கிறார். அவர் சொன்னால் சரிதான்.

பிபிசி


கருத்துகள்