இடுகைகள்

கணிதவியலாளர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெண்களுக்குத் தேவை வாய்ப்புகள்தான் கருணை அல்ல!

படம்
நேர்காணல் வாய்ப்பு கொடுத்தால் பெண்களாலும் சாதிக்கமுடியும்! அலெசாண்ட்ரா செலெட்டி (ALESSANDRA CELLETTI) இத்தாலியைச் சேர்ந்த கணிதவியலாளர் அலெசாண்ட்ரா செலெட்டி, ரோம் டோர் வர்கட்டா பல்கலையில் கணிதவியலாளராக பணியாற்றி வருகிறார். அலெசாண்ட்ரா, டைனமிக்கல் சிஸ்டம்ஸ், காம் தியரி, செலஸ்டிகல் மெக்கானிக்ஸ் (வளிமண்டல இயக்கவியல்) ஆகி பங்களிப்புக்காக பாராட்டப்பெற்றவர். ஆராய்ச்சிக் கட்டுரைகளோடு பல்வேறு நூல்களையும் எழுதியுள்ளார். கணிதத்தில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளீர்கள்.உங்களது பள்ளிப்பருவத்திலிருந்தே கணிதம் மீது ஈர்ப்புடையவராக இருந்தீர்களா? எனக்கு இப்போது அந்த காலத்தை நினைவுகூர்ந்து பார்த்தால், ஐந்து வயதில் உறவினர் ஒருவர் என்னைக் கேட்ட கேள்வி நினைவுக்கு வருகிறது. உனக்கு என்னவாக ஆசை என்று கேட்டார். நான் கணிதம் படிக்கப்போகிறேன் என்று கூறியது மங்கலாக நினைவு இருக்கிறது. செலஸ்டிகல் மெக்கானிக்ஸ்என்று அன்று சொல்லியிருக்கமுடியாது. கணிதம் இல்லாமல் இளம் வயதில் அறிவியல் குறும்படங்களை எடுக்கும் ஆசை தோன்றியது. நீங்கள் அறிவியல் பத்திரிக்கைக்கு ஆசிரியராகவும் செயல்படுகிறீர்கள் என்று கேள்விப்பட்டோம