இடுகைகள்

கலாசாரம் - வீட்டில் ஆண்கள் வேலையில் பெண்கள்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வீட்டு வேலைகள் புருஷ லட்சணம்!

படம்
வீட்டு வேலைகள் புருஷ லட்சணம்! –- இல்லரத்தரசர்களின் கலாசாரம்  ஆபீஸ் போவதுதான் ஆண்களில் இலக்கணம் என்பது மாறி பெண்களை வேலைக்கு அனுப்பிவிட்டு குழந்தைகளை அக்கறையாக பராமரிக்கும் கணவர்களின் எண்ணிக்கை கேரளாவில் விறுவிறுவென அதிகரித்துவருகிறது. உலகளவில் குழந்தைகளை பராமரிக்கும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும், குடும்பத்தலைவர்கள் என்றாலே ஆண்கள் என பழகிய இந்தியாவில் அதிலும் கேரள மாநிலத்தில் பெருமளவு மாற்றம் தொடங்கியுள்ளது ஆச்சர்யம். கோட்டயம் மாவட்டத்திலுள்ள பனிரெண்டுக்கும் மேற்பட்ட குடும்பங்களில் பெண்கள் வெளிநாடுகளில் வேலைபார்த்து சம்பாதித்து பணம் அனுப்ப, ஆண்களே வீட்டுச்சாமான்களை வாங்கிப்போட்டு குழந்தைகளை ஆராரிரோ பாடி தூங்கவைத்து பராமரித்து வருகிறார்கள். “நானும் மனைவியும் இங்கிலாந்தில் மருத்துவத்துறையில் வேலைபார்த்து வந்தோம். குழந்தை பிறந்தவுடன் அங்கு செலவுகள் கூடியதால் குழந்தையை வளர்ப்பதற்காக நான் ஊர் திரும்பிவிட்டேன். என்பெற்றோர்கள், உறவினர்கள் குழந்தை வளர்ப்பில் உதவுகிறார்கள்” என்கிறார் இல்லரத்தரசர் பாபு ஜோசப். இவர் மட்டுமல்ல இம்மாவட்டத்தில் 117 கணவர்கள் குழந்தைகள் வளர