இடுகைகள்

கட்டிடங்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கட்டுமானத்துறையில் பெண்களை நிலைநிறுத்தும் கேர்ள்ஸ் காரேஜ்!

படம்
  பெண்கள் உருவாக்கும் கட்டிடங்கள் - கேர்ள்ஸ் காரேஜ் கட்டுமானத்துறையைப் பொறுத்தவரை பெண்கள் அதில் அலுவலகத்தில் வடிவமைப்பு சார்ந்து செயல்படுபவர்களாக இருப்பார்கள். நேரடியாக கட்டுமான உருவாக்கத்தில் பங்கு பெறுபவர்களாக இருப்பது இல்லை. இதற்கு பாலின பாகுபாடு, பெண் கட்டுமான கலைஞர்கள் மீது நம்பிக்கை இல்லாதது. கூட காரணமாக இருக்கலாம். இதை கேர்ள்ஸ் காரேஜ் என்ற தன்னார்வ லாபநோக்கற்ற அமைப்பின் தலைவரான எமிலி பில்லோடன் லாம் மாற்றிவருகிறார்.  யசி பெர்க்லியில் கட்டுமான கலை படிப்பை முடித்தவர், சிகாகோவில் உள்ள கலைப்பள்ளியில் பட்டம்பெற்றுள்ளார். தொடக்கத்தில் ஹெச் டிசைன் என்ற பெயரில் கட்டுமான நிறுவனத்தை தொடங்கினார். அதாவது, 2008ஆம் ஆண்டு ஆண்டு. பிறகு, 2013ஆம்ஆண்டு அதன் பெயரை கேர்ள்ஸ் காரேஜ் என பெயர் மாற்றி, கட்டுமான பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு குறைந்த தொகை அல்லது இலவசம் என்ற வகையில் வேலை கொடுத்து கட்டுமானங்களை உருவாக்கத் தொடங்கினார். அமெரிக்காவில் கட்டுமானத்துறையில் 3.4 சதவீத பெண்கள்தான் பணியாற்றுகிறார்கள். இந்த சூழலில் எமிலி, தனது நிறுவனம் முழுக்க பெண்களை மட்டுமே மையமாக வைத்து இயங்குகிறார். ''&#

சிமெண்ட், கான்க்ரீட் வேறுபாடு என்ன?

படம்
  சிமெண்ட் கால்சியம், சிலிகன், அலுமினியம், இரும்பு ஆகியவற்றின் கலவையே சிமெண்ட். இக்கலவையை  அதிக வெப்பநிலைக்கு உட்படுத்தும்போது,பாறையை ஒத்த கடினமான பொருளாகிறது. இதை அரைத்து பொடியாக்கினால், அதுதான் வீடுகட்டப் பயன்படுத்தும் சிமெண்ட்.சிமெண்டை முதலில் பயன்படுத்தியவர்கள், மாசிடோனியர்கள். பிறகு மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகு ரோமானியர்கள் பயன்படுத்தினர். இவர்கள் வேசிவியஸ் (Mount Vesuvius)எரிமலையில் கிடைத்த சாம்பலையும் , சுண்ணாம்புக்கல்லோடு கலந்து பயன்படுத்தினர். நாம் பயன்படுத்தும் சிமெண்டில் எரிமலை சாம்பலுக்கு பதிலாக நிலக்கரியை எரித்துப் பெறும் எரிசாம்பலைப் பயன்படுத்துகின்றனர்.   சுண்ணாம்புக்கல், வண்டல் மண் ஆகியவற்றை ஒன்றாக கலந்து போர்ட்லேண்ட் சிமெண்ட் என்பதை முதலில் உருவாக்கியவர், இங்கிலாந்தைச் சேர்ந்த ஜோசப் ஆஸ்ப்டின் (Joseph Aspdin). 1817இல் போர்ட்லேண்ட் சிமெண்டை உருவாக்கும் பரிசோதனைகளை செய்தார். அதில் வெற்றிகண்டவர், 1824ஆம் ஆண்டு தனது கண்டுபிடிப்பிற்கான காப்புரிமையை பதிவு செய்தார்.  கான்க்ரீட் இதில் மணல், சரளைக்கற்கள், நீர் ஆகியவற்றோடு சிமெண்ட்டை கலக்கி பசைபோலாக்கினால்  அதன் பெயர்தான், கா

அமெரிக்காவை திகைக்க வைக்கும் அழகிய இரும்பு பட்டாம்பூச்சி! - லாரா - ரா.கி.ரங்கராஜன் - நாவல்

படம்
  லாரா  ஷிட்னி ஷெல்டன் (தி ஸ்டார்ஸ் ஷைனிங் டவுன்) தமிழில் - ரா.கி. ரங்கராஜன்  அல்லயன்ஸ் வெளியீடு ரூ.400 லாரா கேமரான் என்ற கட்டுமான உலகின் மகத்தான தொழிலதிபர் பற்றிய ஏற்றமும் வீழ்ச்சியும் பற்றிய கதை.  ஸ்காட்லாந்தைப் பாரம்பரியமாக கொண்ட குடும்பம் லாராவினுடையது. ஆனால் அவளது அப்பாவிற்கு வாழ்க்கையில் பெரிய லட்சியம் கிடையாது. அதாவது வயிற்றுப்பாட்டை சமாளிக்க கூட திறனில்லாத தறுதலை. இந்த நேரத்தில் அவர் ஒரு பெண்ணை திருமணம் செய்து குடும்பத்தை ஏற்படுத்திக்கொள்கிறார். அவருக்கு பிறக்கும் இரட்டை குழந்தைகளில் பெண் குழந்தை மட்டுமே பிழைக்கிறது. ஆண் குழந்தை பிறந்தவுடனே இறந்துபோகிறது.  இது தான் நாயகியின் அறிமுக காட்சி. ராஜ மௌலி படம் போல நினைக்க ஏதுமில்லை. எல்லாமே அவமானங்கள்தான். லாட்ஜ் ஒன்றை நிர்வாகம் செய்து அதில் கிடைக்கும் வாடகை வருமானத்தை ஓனரிடம் ஒப்படைத்தால் கிடைக்கும் தொகையை வைத்துத்தான் லாராவின் அப்பா, விலைமாது விடுதியில் போதையேற்றிக்கொண்டு கிடக்கிறார்.  இப்படியிருக்க மெல்ல லாரா லாட்ஜில் உள்ள விவகாரங்களை கவனிக்கிறாள். பிறகு அப்பா, விபத்தாகி படுத்துவிட அனைத்து விஷயங்களையும் அவளை கவனிக்கும்படி ஆகிறது. வ