இடுகைகள்

அரசு பத்திரங்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கருவூல உண்டியல் பத்திரம் தெரியுமா?

படம்
Quora பொருளாதாரம் அறிவோம் 2 கருவூல உண்டியல் இந்திய அரசு வெளியிடும் டி.பில்கள் அல்லது கருவூல உண்டியல் என்பவை, குறுகிய கால கடன் உபகரணமாகும். இவற்றை 91, 182,364 என மூன்று காலகட்டங்களில் இப்பத்திரங்கள் வெளியிடப்படுகின்றன. இவை ஜீரோ வட்டிவிகிதப் பத்திரங்கள் ஆகும். 91 நாட்கள் கொண்ட ரூ.100 மதிப்பிலான பத்திரம் ரூ.98.20 க்கு விற்கப்படும். கழிவு என்பது ரூ.1.80 வழங்கப்பட்டாலும் மதிப்பு என்பது ரூ.100க்குத்தான். வாரம்தோறும் புதன்கிழமை, கருவூல உண்டியல் பத்திரங்கள் ரிசர்வ் வங்கியால் ஏலமிடப்படுகின்றன. 91 நாட்கள் காலம் கொண்ட கருவூல உண்டியல் பத்திரங்கள் வாரம்தோறும் புதன்கிழமையும், 182, 364 நாட்கள் காலம் கொண்ட பத்திரங்கள் ஒருவாரம் விட்டு புதன்கிழமை ஏலத்திற்கு ஏற்கப்படுகின்றன. பத்திரங்களுக்கான பணம் அனுப்பீடு தொடர்பான வேலைகள் ஏலம் முடிந்தபின்னர் வெள்ளிக்கிழமை தொடங்குகின்றன. ஏலம் தொடர்பான செய்திகளை ரிசர்வ் வங்கி தன் பத்திரிக்கை வெளியீடு மூலம் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கிறது. சரஸ் நன்றி: இந்திய ரிசர்வ் வங்கி

அரசு பத்திரங்களை அறிவீர்களா?

படம்
அரசு பத்திரங்களை அறிவோம்! இந்திய அரசு வெளியிடும் அரசு பத்திரங்கள் குறித்த விளம்பரங்களை நாளிதழில் பார்த்திருப்பீர்கள். உண்மையில் அரசு பத்திரங்களின் பயன் என்ன? நிறுவனங்கள் வணிகத்தில் எளிதில் ஈடுபடுவதற்காக இந்திய அரசு, பத்திரங்களை வெளியிடுகிறது. அரசு பத்திரம் மத்திய மற்றும் மாநில அரசுகள் பத்திரத்தை வெளியிடுகின்றன. முதலில் பெருநிறுவனங்கள் வணிகத்திற்காக இப்பத்திரங்களில் முதலீடு செய்தன. தற்போது சிறு நிறுவனங்களும் இதில் முதலீடு செய்வது அரசின் விதிமுறைகளால் கட்டாயம் ஆகியுள்ளது. பத்திரத்தின் ஆயுள் அரசு வெளியிடும் பத்திரத்தின் கடன் பொறுப்புக்கு அரசு பொறுப்பேற்பதால் பயம் தேவையில்லை. இப்பத்திரங்கள்  குறைந்தது ஓராண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் கொண்டதாக தேதியிட்டு வெளியிடப்படுகின்றன. இந்திய அரசு இவை தவிர தேசிய சேமிப்பு சான்றிதழ், சேமிப்பு பத்திரம் ஆகியவற்றை வெளியிடுகின்றன. சிறப்பு பத்திரங்களாக எண்ணெய் பத்திரங்கள், சக்தி பத்திரங்கள், உணவுப்பொருள் பத்திரங்கள், உரப்பத்திரங்களும் இவ்வகையில் சேரும்.  மேற்கூறிய அனைத்து பத்திரங்களையும் வணிகத்திற்கான பத்திரங்களாக கருத முடியாது.  ந