இடுகைகள்

பின்லாந்து லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பின்லாந்து கல்விமுறையில் என்ன சிறப்பு உள்ளது?

படம்
  டீச் லைக் ஃபின்லாந்து டிமோத்தி டி வாக்கர் கல்வி கட்டுரை நூல் அமெரிக்க ஆசிரியரான வாக்கர், பின்லாந்துக்கு பணிமாறி செல்கிறார். அங்கு ஹெல்சின்கி என்ற நகரில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார். அவரைப் பொறுத்தவரை வேலை என்பதில் ஓய்வே கிடையாது. மனிதனா, எந்திரமா என்று கேட்கும்படி உழைக்கவேண்டும் என பாடுபடுகிறார். இறுதியாகத்தான் தெரிகிறது. அப்படி பாடுபட்டு உழைக்கவேண்டியதில்லை. மாணவர்கள் உயருவதற்கு, கவனிப்பதற்கு என்ன செய்யவேண்டுமோ அதை செய்தால் போதும் என புரிந்துகொள்கிறார். அதற்காக ஏராளமான நூல்களைப் படித்து பல்வேறு சோதனை முறைகளை செய்து பார்க்கிறார். அதைப்பற்றிய அனுபவங்களை பகிரும் நூல்தான் இது.  பின்லாந்தில் உள்ள கல்விமுறை, கல்வி ஆராய்ச்சி பற்றி வாக்கர் முதலில் பெரிதாக கண்டுகொள்வதில்லை. அமெரிக்க முறையில் கல்வியை போதிக்கிறார். தன்னை சற்று நெகிழ்த்திக்கொள்வதில்லை இறுக்கமாகவே இருக்கிறார். அவர் மனம் எப்படி மெல்ல மாறுகிறது என்பதே நூல் விளக்குகிறது. நூலில் அதிகமுறை வரும் வார்த்தை, அமெரிக்காவில், அமெரிக்க கல்விமுறையில் என்பதுதான். பின்லாந்து எப்படிப்பட்ட நாடாக இருந்தாலும் சரி, அந்த நாட்டின...

அணுக்கழிவுகளை பாதுகாக்க பின்லாந்து செய்யும் முதல் முயற்சி!

படம்
  அணுக்கழிவுகளுக்கான நிரந்தர பாதுகாப்பிடம்! ஃபின்லாந்தின் மேற்கு கடற்புரத்தில் அமைந்துள்ளது, ஒல்கிலூடோ தீவு (Olkiluoto). இங்குதான் உலக நாடுகளிலேயே முதல்முறையாக நிரந்தர அணு உலைக் கழிவுகளுக்கான பாதுகாப்பிடத்தை உருவாக்கி வருகின்றனர்.   இங்குள்ள அணுக்கழிவு செயல்பாட்டு அறைகள், கதிர்வீச்சைத் தடுக்க  தடிமனான கான்க்ரீட் சுவர்களால் கட்டப்படுகின்றன. பாதுகாக்கவேண்டிய யுரேனியக் கழிவு, உயரமான செம்பு பெட்டகத்தில் அடைக்கப்படுகிறது. பிறகு, பெட்டகம் பென்டோனைட் களிமண்ணால் (Bentonite) உறுதியாக அடைக்கப்படுகிறது.  பின்னர், பெட்டகம் கடல்மட்டத்திலிருந்து 420 கி.மீ. கீழே பாறைகள் சூழ்ந்த இடத்தில்தான் பாதுகாப்பாக வைக்கப்படும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அணுக்கழிவுகளைப் பாதுகாப்பதற்கென பூமியின் ஆழத்தில்  430 சுரங்கங்களை உருவாக்கி வருகின்றனர். பல்வேறு நாடுகளிலும் அணு உலை மின்சார உற்பத்தியை மெல்ல குறைத்து வருகின்றனர். காரணம், அணுஉலை கழிவுகளால், சூழலுக்கு ஏற்படுத்தும் மாசுபாடுகளே காரணம். ஃபின்லாந்து, கார்பன் வெளியீடு இல்லாத மின்சாரத்தை தயாரிப்பதாக, ஐரோப்பிய யூனியனில் கூறியுள்ளது. நான்...

கைதிகளுக்கு மறுவாழ்க்கை தருகிறது பின்லாந்து!

படம்
சிறைவாசிகளுக்கு ஏ.ஐ. பயிற்சி! செய்தி: பின்லாந்து நாட்டிலுள்ள சிறைக்கைதிகளுக்கு அரசு, செயற்கை நுண்ணறிவு பற்றிய பயிற்சிகளை வழங்கி வேலைவாய்ப்புகளுக்கு தயார் செய்கிறது. பின்லாந்து நாட்டிலுள்ள ஹெல்சிங்கி பல்கலைக்கழகம் ஏ.ஐ. பற்றிய முன்மாதிரி பாடத்திட்டத்தை தயாரித்தது. இதன் நோக்கம், செயற்கை நுண்ணறிவு பற்றிய அறிவை மக்களுக்கு ஏற்படுத்துவதே ஆகும். அம்முயற்சிக்காகத்தான் சிறைவாசிகளுக்கு டேப்லட், கணினிகளை கொடுத்து பயிற்சி அளித்து வருகின்றனர். தகவல் யுகத்தில் வேலைவாய்ப்புகளை பெறுவதற்கான கணினி திறன் திட்டமாக அமையவேண்டும் என்பது அரசின் எதிர்பார்ப்பு. இந்த நோக்கத்தின்படி மாணவர்களுக்கான திட்டமாகவே ஏ.ஐ.பயிற்சி முறை உருவானது. குற்றத்துறை மேலாளரான பியா புலாலகாவின் முயற்சியால் அரசு, ஏ.ஐ. பயிற்சிகளை சிறைக்கைதிகளுக்கு வழங்க இசைந்துள்ளது. “இப்பாடத்திட்டத்தை ரியாக்டர் என்ற நிறுவனம் செயல்படுத்தியது. கைதிகளின் முகவரிகளை கருப்பு பட்டியலில் வைத்திருப்பதால், இணைய இணைப்பு பெறுவதில் சிக்கல் இருந்தது. சிறை முகவரியில் அவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி வசதி உட்பட செய்துகொடுத்திருக்கிறோம். சிறையிலிருந்து வ...