அணுக்கழிவுகளை பாதுகாக்க பின்லாந்து செய்யும் முதல் முயற்சி!
அணுக்கழிவுகளுக்கான நிரந்தர பாதுகாப்பிடம்!
ஃபின்லாந்தின் மேற்கு கடற்புரத்தில் அமைந்துள்ளது, ஒல்கிலூடோ தீவு (Olkiluoto). இங்குதான் உலக நாடுகளிலேயே முதல்முறையாக நிரந்தர அணு உலைக் கழிவுகளுக்கான பாதுகாப்பிடத்தை உருவாக்கி வருகின்றனர்.
இங்குள்ள அணுக்கழிவு செயல்பாட்டு அறைகள், கதிர்வீச்சைத் தடுக்க தடிமனான கான்க்ரீட் சுவர்களால் கட்டப்படுகின்றன. பாதுகாக்கவேண்டிய யுரேனியக் கழிவு, உயரமான செம்பு பெட்டகத்தில் அடைக்கப்படுகிறது. பிறகு, பெட்டகம் பென்டோனைட் களிமண்ணால் (Bentonite) உறுதியாக அடைக்கப்படுகிறது. பின்னர், பெட்டகம் கடல்மட்டத்திலிருந்து 420 கி.மீ. கீழே பாறைகள் சூழ்ந்த இடத்தில்தான் பாதுகாப்பாக வைக்கப்படும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அணுக்கழிவுகளைப் பாதுகாப்பதற்கென பூமியின் ஆழத்தில் 430 சுரங்கங்களை உருவாக்கி வருகின்றனர்.
பல்வேறு நாடுகளிலும் அணு உலை மின்சார உற்பத்தியை மெல்ல குறைத்து வருகின்றனர். காரணம், அணுஉலை கழிவுகளால், சூழலுக்கு ஏற்படுத்தும் மாசுபாடுகளே காரணம். ஃபின்லாந்து, கார்பன் வெளியீடு இல்லாத மின்சாரத்தை தயாரிப்பதாக, ஐரோப்பிய யூனியனில் கூறியுள்ளது. நான்கு ரியாக்டர்கள் ஒல்கிலூடோ தீவில் செயல்பாட்டில் உள்ளன. இங்கு, பொருத்தப்பட்டுள்ள ரியாக்டர்கள் செயல்பாட்டிற்கு வந்தால், அணுசக்தி மூலம் கிடைக்கும் மின்சாரம் ஃபின்லாந்தில் 40 சதவீதமாக உயரும்.
வெப்பமும் கதிர்வீச்சும் கொண்ட யுரேனியத்தின் எரிபொருள் தகடுகளை பிற நாடுகள், கான்க்ரீட்டும் ஸ்டீலும் கொண்டு பாதுகாக்கின்றனர். ஃபின்லாந்து நாட்டு அறிவியலாளர்கள், இவற்றை நீரில் குளிர்வித்துப் பயன்படுத்துகின்றனர். நிலத்தில் அணுக்கழிவுகளை சேமிப்பதை சர்வதேச அணுவாற்றல் முகமை பாதுகாப்பானதாக கருதவில்லை. ஏனெனில் இம்முறையில் எளிதாக கதிரியக்கப் பொருட்கள் கசிய வாய்ப்பு உண்டு.
ஃபின்லாந்தின் ஆல்கிலியோடா தீவில் அமைக்கப்பட்ட நிரந்தர கழிவு அமைப்பிடத்தை அணு உலை வல்லுநர்கள் வரவேற்றுள்ளனர். 2009ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் அணுக்கழிவுகளை கொட்டுவதற்கான பாதுகாப்பிடத்தை அமைக்க அரசு முடிவெடுத்தது. ஆனால் மக்கள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
ஃபின்லாந்து நாட்டில், மக்களிடையே அணுக்கழிவு பாதுகாப்பிடம் பற்றி எடுத்துச்சொல்லி, நம்பிக்கையூட்டி திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளனர். ஃபின்லாந்தில் அணுக்கழிவுகளை கையாளவும், அவற்றை சேகரித்து வைப்பதற்குமான செயல்பட்டை பொசிவா (Posiva) என்ற நிறுவனம் செய்கிறது. 2021ஆம் ஆண்டு பாதுகாப்பிடத்திற்கான சட்டப்பூர்வ அனுமதி கிடைத்துவிட்டது. 2024ஆம் ஆண்டு முதல் பொசிவா தனது பணிகளைத் தொடங்கவுள்ளது.
Science
Final resting place
https://www.science.org/content/article/finland-built-tomb-store-nuclear-waste-can-it-survive-100000-years
கருத்துகள்
கருத்துரையிடுக