விண்வெளி வீரர்கள் பற்றிய சுவாரசியமான தகவல்கள்!
விண்வெளியில் உள்ள குறைந்த ஈர்ப்பு விசையை, மைக்ரோகிராவிட்டி(Micro Gravity) என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
விண்வெளியில் ஆறுமாதம் பணியாற்றும் விண்வெளி வீரர்களுக்கு, உடலில் 20 சதவீத எலும்பு அடர்த்தி குறைகிறது.
விண்வெளியில் முதன்முறையாக உணவு உண்டவர் சோவியத் ரஷ்யாவைச் சேர்ந்த விண்வெளி வீரரான யூரி ககாரின் (Yuri Gagarin). வோஸ்டாக் 1 (Vostok 1)விண்கலத்தில் விண்வெளிக்கு சென்றவர், அங்கு மாட்டிறைச்சியும் ஈரலும் கலந்த பாஸ்தா உணவை உண்டார்.
உலர வைக்கப்பட்ட இறைச்சி, பால் பொருட்கள், பருப்புகள், ஈரப்பதம் குறைந்த பிஸ்கெட்டுகள், சாக்லெட், நூடுல்ஸ்,பாஸ்தா ஆகிய உணவுப் பொருட்களை விண்வெளி வீரர்களுக்கு, ஆராய்ச்சி அமைப்புகள் வழங்குகின்றன. வழங்கப்படும் உப்பும், மிளகும் நீர்ம வடிவில் இருக்கும். தற்போது சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் வீரர்களுக்கென 100க்கும் மேற்பட்ட உணவுப்பொருட்கள் கொண்ட பட்டியல் உள்ளது.
சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் வழங்கப்படும் உணவுகள் (3 வேளை) வழியாக வீரர்களுக்கு 3,300 கலோரிகள் கிடைக்கின்றன. சாப்பிட்டபிறகு மீதமாகும் உணவுக்கழிவுகளை அதற்கென சிறப்பாக அமைக்கப்பட்ட குப்பைத்தொட்டியில் போடுகின்றனர்.
கோள்களின் வேறுபட்ட நிறத்திற்கு அதன் நிலப்பரப்பு மற்றும் வளிமண்டலத்திலுள்ள வேதிப்பொருட்களே முக்கியமான காரணம். பூமி, நீலநிறத்தில் தெரிய அதன் பரப்பில் உள்ள கடல் காரணம். நெப்டியூன், யுரேனஸ் ஆகிய கோள்கள் நீலமாக தெரிய அதன் வளிமண்டலத்தில் உள்ள மீத்தேன் காரணமாகும்.
https://www.nasa.gov/feature/space-station-20th-food-on-iss
கருத்துகள்
கருத்துரையிடுக