இடுகைகள்

ரத்தக்காட்டேரி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தொன்மையான ரத்தக்காட்டேரி உயிர்பெற்று வந்து திருமணம் செய்ய முயற்சித்தால்.... துப்பறியும் ஸ்கூபி டூபி டூ குழு

படம்
          ஸ்கூபி டூ மியூசிக் ஆப் தி வாம்பயர் அனிமேஷன் வார்னர் பிரதர்ஸ் அனிமேஷன்   பேய்களையும் , குற்றவாளிகளையும் பிடித்து களைப்பில் இருக்கும் மிஸ்டரி மெஷின் குழு , ஓய்வெடுக்க நினைக்கிறது . இதற்காக அவர்கள் ரத்தக்காட்டேரிகள் உள்ள ஊருக்கு செல்கிறது . அங்கு வின்சென்ட் என்பவர் , பரம்பரை வழியில் ரத்தக்காட்டேரிகள் பற்றி கதைகளை எழுதி வருகிறார் . இதற்கென தனது அருங்காட்சியகம் ஒன்றை நிறுவியிருக்கிறார் . ஆண்டுதோறும் ரத்தக்காட்டேரிகளை பெருமைப்படுத்தும் விழாவும் அவரது ஊரில் நடத்தப்படுகிறது . ஆனால் ரத்தக்காட்டேரிகளைப் பற்றிய காதல் நூல்களை எழுதிவரும் காலத்தில் அவரின் திகில் எழுத்துகள் விற்கமாட்டேன்கிறது . இந்த நிலையில் அவரது அருங்காட்சியகத்தில் உள்ள ரத்தக்காட்டேரிக்கு உயிர் வருகிறது . மக்களைக் கொல்லுவதற்காக துரத்துகிறது . குறிப்பாக , ரத்தக்காட்டேரி நாடகத்தில் நடிக்கும் நடிகர்கள் புதுமையான தொன்மை ரத்தக்காட்டேரியின் சக்திக்கு அடிமையாகிறார்கள் . அதேநேரம் அங்குள்ள நகர மேயர் ரத்தக்காட்டேரி என்ற வார்த்தையை வெறுப்பவர . அவர் மக்களைத் திரட்டி ரத்தக்காட்டேரி அருங்காட்சியகம் , விழா ஆகியவற்றைத்

என்னுடைய காதலி யார் என்று தெரியுமா? லெட் மீ இன்

படம்
  லெட் மீ இன்       லெட் மீ இன்   Directed by Matt Reeves Screenplay by Matt Reeves Based on Let the Right One In by John Ajvide Lindqvist   Music by Michael Giacchino Cinematography Greig Fraser   லெட் மீ இன் 2008ஆம் ஆண்டு வந்த ஸ்வீடன் படத்தை ஆங்கிலத்தில் ரீமேக் செய்திருக்கிறார்கள். லெட் தி ரைட் ஒன் இன் என்பதுதான் மூலப்படம். நியூ மெக்சிகோவின் லாஸ் அலமோஸில் 1980ஆம் ஆண்டு நடைபெறுகிறது படம். 12 வயது மகிழ்ச்சியில்லாத சிறுவன், ஓவன். அவனது பெற்றோர் விவகாரத்து பெற்றுவிட அம்மாவிடம் வளர்கிறான். பள்ளியில் அவனை அவனது வகுப்பு மாணவர்கள் மூவர் எப்போது அடித்து துன்புறுத்திக்கொண்டே இருக்கிறார்கள். இந்த நிலையில் அவன் வாழும் அபார்ட்மெண்டிற்கு அபி என்ற 12 வயது சிறுமி வருகிறாள். ஓவன், அடிக்கடி டெலஸ்கோப்பில் பக்கத்து வீட்டு  சரச சல்லாபங்களை பார்த்து நமக்கும் ஒரு பெண்தோழி இருந்தால் என கனவில் இருக்கிறான் சரியான அபி அவர்களது கட்டடத்திற்கு வர ஆஹா.. என மகிழ்கிறான். ஆனால் முதல் பேச்சிலேயே அபி நாம் நண்பர்களாக இருக்க முடியாது என மறுக்கிறாள். பின்னாளில் அவன் அவனை விரும்பி நட்புகொள்கிறாள். பகல் முழுவதும் வெளியே வரா