இடுகைகள்

ஆலன் கார்சியா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நான் எனது கடமையைத்தான் செய்தேன்! - பெரு ஊழல்களை வெளிக்கொண்டு வந்த வழக்குரைஞர்

படம்
  ஜோஸ் டெமிங்கோ பெரஸ் இவர்தான் இப்போதைக்கு பெரு நாட்டில் அதிகம் பேசப்படும் நபர். பெரு நாட்டின் முன்னாள் அதிபரை ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்கு தள்ளியவர் இவர்தான்.  இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டிய சூழல் உருவாகும். இதனால் முன்னாள் அதிபர் ஆலன் கார்சியா, அந்த அவமானத்திற்கு பயந்து தற்கொலைக்கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்டுவிட்டார்.  ஒரு வழக்குரைஞர், வலிமை வாய்ந்த முன்னாள் அதிபரை எப்படி எதிர்க்க  முடிந்தது  என்பது பலருக்கும் ஆச்சரியம். ஆனால் அவரது நண்பர்கள் அவர் வழக்குரைஞராக பணியாற்றி போதிலிருந்து அப்படித்தான். நேர்மையாக இருக்கவேண்டுமென நினைப்பார். பிறரிடமும் அதைத்தான் அவர் எதிர்பார்த்தார். அன்றிலிருந்து இன்றுவரை மாறாமல் இருப்பது அவர்களில் கண்களில் தெரியாத பயம்தான் என்றனர்.  பிரேசிலின் ஓடேபிரச்சிட் என்ற நிறுவனம்தான் ஒப்பந்தங்களைப் பெற பணத்தை வாரி இறைத்திருக்கிறது. இந்த நிறுவனத்திடன் பணம் பெற்றுக்கொண்டு அரசு ஒப்பந்தங்களை கொடுத்துள்ளதாகதான் கார்சியா மீது வழக்கு. தொடக்கத்தில் நான் எந்த பணத்தையும் வாங்கவில்லை என்று கூறியவர், இதில் நிறைய