திட்டமிட்டு எதிரிகளை அழித்தொழித்து ரத்தக்களறியாடும் புரட்சித் தலைவன்!
எதிரிகளை அழித்தொழிக்கும் புரட்சித் தலைவன்! ஹெவன்லி டீமன் நாட் லிவ் இன் நார்மல் லைஃப் சீன காமிக்ஸ் தொடர் 100+--- டிமிட்ரி குடும்பத்தின் மூத்தமகன் ரோமன். இவர் தற்கொலை செய்துகொள்ள அவரது உடலில் தொன்மை காலத்து தீயசக்தி இனக்குழுத் தலைவரின் ஆவி உள்ளே புக, நவீன காலத்தில் நடக்கும் அதிகார மேலாதிக்கம் உருவாகிறது. அதை பேசுகிற கதைதான் இது. டிமிட்ரி குடும்பம் சுரங்கத் தொழிலாளர்களாக இருந்து இரும்புத்தாதுவை தோண்டிஎடுத்து விற்று செல்வந்தர்களானவர்கள். அவர்களின் பின்புலத்தில் அரச குடும்பமோ, அல்லது வேறு சக்தி வாய்ந்த ஆட்களோ இல்லை. எனவே, அவர்களை வடகிழக்கு பகுதியில் செல்வந்தர்களாக மாறினாலும் கூட பிற குடும்பத்தினர் மதிப்பதில்லை. இதை ரோமன் கண்டுகொள்கிறான். வடக்கிழக்கிலுள்ள அத்தனை பேர்களையும் பலத்தைக் காட்டி மிரட்டி தனக்கு அடிபணியச் செய்கிறான். அதேநேரம், கைரோ நாடு நான்கு பிளவுபட்ட சக்திகளோடு போராடிக் கொண்டிருக்கிறது. இளைஞரான மன்னருக்கு முடிவெடுக்கக்கூட அதிகாரம் இல்லை. குரோனோ, அரிஸ்டோகிரேட், வல்கல்லா என மூன்று சக்திகளோடு சமரசம் செய்துதான் அரசரின் ஆட்சி நடக்கிறது. ரோமன் உடலுக்குள் தீயசக்தி இனக்குழுத் தலைவர...