புலியும், கொக்கும் இணைந்து ஐநூறு ஆண்டு தொன்மையான தீயசக்தியுடன் போரிட்டு வெல்லும் கதை!

டைகர் அண்ட் கிரேன்
சீன டிராமா

ஒரு நகரம் இருக்கிறது. அந்த நகரில் கடல்நீர், திடீரென அதிகரித்து பாய்ந்து நகரை அழிக்கத் தொடங்குகிறது. அதற்கு பின்னால் தீய சக்தி உள்ளது. அதை நான்கு இளைஞர்கள் சேர்ந்து அழிப்பதுதான் கதை. இதில் அவர்கள் எதிர்கொள்ளும் அரசியல் சதிகள், தந்திரங்கள், போரில் ஏற்படும் இழப்புகள், உள்நோக்கம், சுயநலம், பேராசை என பல்வேறு விஷயங்களைப் பேசுகிறார்கள் மை ஜர்னி டு யூ தொடரில் நடித்த நாயகன்,  இதிலும் முன்னணி நாயகனாக நடித்திருக்கிறார். அவருக்கு இரட்டை வேடம். ஒன்று நல்லவன். இன்னொருவன் கெட்டவன். வெள்ளை, கருப்பு என இரண்டு உடையில் அதை வேறுபடுத்தி காட்ட முயன்றிருக்கிறார்கள்.  

மொத்தம் நான்கு வீரர்கள்.இதில் ஒருவர் மட்டும் கிராமத்தில் இருந்து வருகிறார். மற்றவர்கள் அனைவரும் சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்கள். ஒருவர் நகரின் ராணுவ கமாண்டர், இன்னொருவர் நாட்டின் இளவரசன், இறுதியாக உள்ள இளம்பெண், நகரைக் காக்கும் ராணுவப்படைத் தலைவரின் பிள்ளை. இதில் அனைவருக்கும் சக்திகள் உள்ளது. கிராமத்தில் இருந்து வரும் நாயகன் ஹூ சி, நகைச்சுவைக்கு பொறுப்பு. அவரும் செங்கல் மருத்துவரான இளவரசனும் செய்யும் செயல்கள் அனைத்துமே சிறப்பாக உள்ளன. தொடர் முடியும்போது கூட ஹூ சி, இறந்துபோன தனது நண்பனான செங்கல் மருத்துவரின் அடையாளமான கல்லை தலைக்கு வைத்தே உறங்கி எழுகிறார். இளம்பெண் ஷின்டாங்க், ஈட்டியைப் பயன்படுத்துவதில் கெட்டிக்காரி. அவளுக்கும் ஹூ சிக்குமான காட்சிகளில் பெரிதாக காதல் கிடையாது. அனைத்துமே நகைச்சுவைதான். இருவரும்தான் ஜோடிகள். வெள்ளுடை அணிந்த முதன்மை நாயகனுக்கு, ஜோடி ஏதுமில்லை. அவனுக்கு விதிகள் மட்டுமே முக்கியம். ஹூ சிக்கு விதிகளாவது, மயிராவது என்ற எண்ணம் உண்டு. தவறு, அநீதி என்றால் முதல் குரலாக ஹூ சியிடமிருந்தே எழுகிறது. இப்படித்தான் அவனுக்கு நண்பர்கள் கூட்டம் சேர்கிறது.

தொடர் நெடுக நன்மை எது, தீமை எது, முன்முடிவுகள் எப்படி தவறான பாதைக்கு நம்மை கூட்டிச்செல்கிறது, அதன் மூலம் எளிமையான அப்பாவி உயிர்கள் பலியாவதைப் பற்றி பேசியிருக்கிறார்கள். சமகாலத்தில் இந்தியாவில் சிறுபான்மையினரை பொது எதிரியாக கட்டமைத்து அவர்களின் வீடுகளை இடித்து, படுகொலை செய்யும் பேரினவாத செயல்கள் நினைவுக்கு வந்து போகிறது. ஒருகட்டத்தில் மனதில் பேராசை, பயம், அதிகாரம் உள்ளவர்கள்தான் தீயசக்தி என அறிந்துகொள்கிறோம்.

ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற உண்மையை வெகுஜனம் அறியும்போதே ஏராளமான இழப்புகள் நடந்துவிடுகின்றன. நேசித்த நண்பர்கள் இறந்துவிடுகிறார்கள். ஹூ சியின் காதலி தீயசக்தியால் குத்துபட்டு இறந்துபோகிறாள். ஏராளமான வீரர்கள் போரில் இழுத்து வரப்பட்டு இறக்கிறார்கள். தொடர் முடியும்போது ஹூ சி தனது தாயின் பிறந்த இடமான டிபெங் தீவில் தங்கிக்கொள்கிறான். மற்றவர்கள் நகருக்கு திரும்புகிறார்கள். அடுத்த சீசனுக்கான காட்சித் துணுக்கும் உள்ளது. அதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.

சீன தொடர்களில் கிளிஷேவாக வரும் காட்சி, பெண் ஆண் உடையை அணிந்தால் அவளை அனைவரும் ஆண் என்று நம்புவது, பேசுவது. ஆணுடைய உடையை பெண் அணிந்தாலும் பெண் என்ற வேறுபாடு தெரியும். பார்வையாளர்களுக்கே தெரிகிறது. ஆனால், தொடரில் உள்ள பாத்திரங்களுக்கு தெரிவதில்லை. இதைவேறு காமெடி என தொடர்ச்சியாக செய்கிறார்கள். இதைக் கொஞ்சம் சொல்லி நிறுத்தினால் தேவலை. சகிக்க முடியவில்லை. இதில் ஆண் என நினைத்து பெண்ணின் மார்பகத்தையே ஒரு பாத்திரம் அழுத்திப் பார்க்கிறது. வாட் எ கிரியேட்டிவிட்டி இயக்குநரே.

க்யூவுஜி என்பவரின் பிள்ளைதான் ஹூ சி. அவரின் தலைமுறையைச் சேர்ந்தவர் ஷியான். அவருக்கும் ஹூ சிக்கும் எப்படி ஒரு வயது இருக்கும்? ஹூ சியின் தாய் புலி. அவருக்கும் க்யூவூஜி என்ற க்யூ வம்ச நாயகனுக்கும் பிறந்தவர்தான் ஹூ சி.

ஷின்டாங்கின் அம்மா, ஈட்டியை சிறப்பாக பயன்படுத்தும் தற்காப்புக்கலை வல்லுநர், அவர் வெளிப்படையாக தீயசக்திகளுடன் சண்டை போடுகிறார். இந்த நிலையில் அவரது பெண் எதற்கு ஆண் போல உடையணிந்து சுற்ற வேண்டும்? அவருக்கு வூ குடும்ப ஒற்றை வாரிசுக்குமான கதை தனியானது. வூவுக்கு தனது குடும்ப பெருமையை நிலைநாட்டும் கோபம் உள்ளது. ஒருகட்டத்தில் ஷின்டானை அவமானப்படுத்துகிறார். பிறகு, அவரிடம் அடி வாங்கி காயம்பட்டு குணமாகிறார். பிறகு அவரது தலைமையின் கீழே புகாரின்றி வேலை செய்கிறார். இங்கு அவர் ஷின்டானின் தற்காப்புக்கலையை ஏற்கிறார். நாடு என்பதன் கீழ் யோசிக்கும்போது, க்யூ வம்சாவளி பெண் கமாண்டரை விட ஷின்டான் நேர்மையானவர். வலிமையானவரும் கூட.

நாட்டிற்காக தங்களை அர்ப்பணிக்கும் நிறைய வீரர்களைப் பார்க்கிறோம். செங்கல் மருத்துவர், ஹூ சி இருவரின் நட்பு பலமானது. ஹூ சி தனது நண்பனை எங்கும் விட்டுக்கொடுப்பதில்லை. காதலி ஷின்டான், க்யூன்சியான் ஆகிய இருவரை விட முன்னவர்களின் நட்பு சிறப்பாக உள்ளது.

நன்மை, தீமை என்பதை முன்முடிவுகளோடு அணுக கூடாது. எது சரி தவறு என்பதை செயலை வைத்தே முடிவு செய்யவேண்டும் என பல்வேறு காட்சிகள் இயக்குநர் அழுத்தமாக சொல்ல முயன்றிருக்கிறார். தீயசக்தி என்பது செயலைப் பொறுத்தது. குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தது அல்ல என பல்வேறு காட்சிகள் கூறியுள்ளார். நாயகர்கள் ஒரு புல்வெளியில் அமர்ந்து எதிர்காலம் பற்றி பேசும்போதே சோலி முடிந்தது சோணமுத்தா என தோன்ற ஆரம்பித்துவிடுகிறது. அதை இறுதிக்காட்சி மெய்ப்பிக்கிறது.  

கிராபிக்ஸ் காட்சிகள் சுமாராகத்தான் உள்ளன. நேரமிருப்பவர்கள் பார்க்கலாம். யூட்யூபிலேயே இலவசமாக கிடைக்கிறது.  டைகர் அண்ட் கிரேன்

கிராபிக்ஸ் காட்சிகள் சுமாராகத்தான் உள்ளன. நேரமிருப்பவர்கள் பார்க்கலாம். யூட்யூபிலேயே இலவசமாக கிடைக்கிறது.  

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்