சைக்கோடிராமா, டிஹெச்சி, சீனா ஒயிட் ஆபத்து

 




 

 

தாலமைடு மருந்தால் ஏற்படும் பின்விளைவுகள் என்ன?

அறுபதுகளில் தாலமைடு, குமட்டலைக் கட்டுப்படுத்தும் மருந்து என விளம்பரம் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்தது, இதை சாப்பிட்ட கர்ப்பிணிகளுக்கு குழந்தைகள் கை, கால்களின்றி ஊனமாக பிறந்தன. சில குழந்தைகளுக்கோ கண் பார்வை, செவித்திறன் பாதிப்பு, இதயத்தில் சிக்கல்கள், குடல் பிரச்னைகள் ஆகிய சிக்கல்கள் இருந்தன. எனவே, புகார்கள் குவிய அமெரிக்க அரசு தாலமைடு மருந்து விற்பனையை நிறுத்தியது. விதிகளை கடுமையாக்கியது.

டிசைனர் ட்ரக்ஸ் என்றால் என்ன?

பெனடைல், மெப்ரிடைன் ஆகிய போதை மருந்துகளை ஒத்த போதைப்பொருட்களின் தயாரிப்பை டிசைனர் ட்ரக்ஸ் என்று கூறுகிறார்கள். பெனடைலின் வேதிப்பொருளைக் கொண்டதுதான் சீனா வொயிட். மார்பினை விட மூன்றாயிரம் மடங்கு அதிக திறன் கொண்டது. குறைந்தளவு பயன்படுத்தி வந்தாலே ஒருவருக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படும். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இத்தகையை போதைப்பொருட்களின் அதீத பயன்பாடு சார்ந்த மரணங்கள் அனேகம் உண்டு.

டெட்ராஹைட்ரோகன்னபைனால் வேதிப்பொருள், எத்தனை நாட்கள் ஒருவரின் உடலில் இருக்கும்?

கஞ்சாவின்  அடிப்படை மூல வேதிப்பொருள் டிஹெச்சி. ஒரு வாரம் வரை ஒருவரின் உடலில் அதிகளவில் காணப்படுகிறது. இத்தகைய காலங்களில் சிறுநீரை சோதித்தாலே வேதிப்பொருளை பயன்படுத்தினாரா இல்லையா என தெரிந்துவிடும். ஒருமாதம் வரை ஒருவரின் உடலில் டிஹெச்சியின் அடையாளங்களை அறிய முடியும்.

சைக்கோ டிராமா என்றால் என்ன ?
உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட மனிதர்களுக்கு குழுவாக உட்கார வைத்து சிகிச்சை அளிப்பது சைக்கோடிராமா என குறிப்பிடுகிறார்கள். இம்முறையை, ஜேக்கப் எல் மோரினோ உருவாக்கினார். இவர் ரோமானியாவில் பிறந்து வியன்னாவில் மருத்துவப் பயிற்சி பெற்று பிறகு அமெரிக்காவிற்கு சென்றுவிட்டார். நியூயார்க்கில் சைக்கோடிராமா இன்ஸ்டிடியூட்டைத் தொடங்கி நடத்தி வந்தார். ஆளுமை பிரச்னைகள், உறவுகள், முரண்பாடுகள், உணர்வு ரீதியான தடுமாற்றங்கள் ஆகியவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

 








 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்