மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கையும், தரமும் வேறுபடுவது எங்கு? - ஜவகர்லால் நேரு உரை
எய்ம்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான ராஜ்குமார் அம்ரித் கௌருக்கு அஞ்சலி செலுத்துவதில் மாணவர்கள், ஆசிரியர்களுடன் நானும் இணைந்துகொள்கிறேன். என்னுடைய நினைவில் மருத்துவமனையையு்ம, தலைவரையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க முடியவில்லை. அந்தளவு அவரின் பணி, மருத்துவமனையோடு ஒன்றிவிட்ட ஒன்று. மருத்துவமனையின் உருவாக்கம் தொடர்பாக கௌர், பல்வேறு விஷயங்களை என்னோடு விவாதித்திருக்கிறார். செயல்பாடுகளில் பிரச்னைகள் வரும்போது என்னைத் தேடி வந்திருக்கிறார். இன்று அவர் நம்முடன் இல்லை என்பது மனதளவில் வேதனை அளிப்பதாக உள்ளது. மருத்துவமனையில் நடைபெற்ற இரண்டாவது பட்டமளிப்பு விழாவுக்கு என்னை அழைத்தபோது, சரி என இசைவு தெரிவித்தேன்.
எய்ம்ஸ் மருத்துவமனை அளவிலும் தரத்திலும் வாக்குறுதி அளித்த வகையில் சிறப்பாக மேம்பட்டுள்ளது. செயல்பாடுகளும் பாராட்டு்ம தரத்தில் உள்ளது. முதுகலை படிப்பு படித்த மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க தகுதியான சிறந்த இடமாக இம்மருத்துவமனை உள்ளது. சிகிச்சையின் உயர்ந்த தரத்தை தொடர்ந்து பராமரிக்க பல்வேறு பாடங்களைச் சொல்லித் தந்து வருகிறார்கள். எண்ணிக்கையைப் பற்றி கவலைப்படாமல் தரத்தைப் பற்றி கவலைப்படும் மனநிலையைக் கொண்டிருக்கிறீர்கள். பெரியளவிலான மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணி இருக்கும்போது எண்ணிக்கையை விட தரம் உயரத்தில் இருப்பது அவசியம்.
(எய்ம்ஸ், டெல்லி ஏப்ரல் 15, 1964)
கருத்துகள்
கருத்துரையிடுக