கலையை ஆவணப்படுத்துவதற்கான முயற்சிகளை தொடங்கவேண்டும்!
நேர்காணல்
கலை ஆய்வாளர் சர்யூ வி தோஷி
எழுத்து, பயணம், உரை, திட்டமிடல், வழிகாட்டுதல் என பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறீர்களே?
சுற்றுலா துறையில் திரைப்படத்திற்கான திரைக்கதை எழுதுவதற்கான கமிட்டியில் கூட பங்காற்றியுள்ளேன். எனக்கு பல்வேறு செயல்பாடுகளை செய்யப்பிடிக்கும். உரை, பேச்சு, கண்காட்சி, கலை விழாக்கள், நாடகம், இசை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள் என பல்வேறு செயல்பாடுகளிலும் பங்கேற்றுள்ளேன். நிறைய மனிதர்களை சந்திப்பது பிடித்தமானது. எனது வீட்டில் கலைஞர்கள், திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள் ஆகியோரை சந்தித்து உரையாடுவதற்கான இடமாகவே இருந்துள்ளது. என்னுடைய மாமியார் வீடு செவ்வியல் இசை, மராத்தி நாடகங்களை போற்றுபவர்கள். இது கலைக்கான காலம். கலையில் புதிய ஆற்றல் உருவாகி வருகிறது. இதன் காரணமாகவே துக்ளக் நாடகத்திற்கான உடை வடிவமைப்பை நான் செய்யும் சூழல் உருவானது.
மும்பையைச் சேர்ந்த சபயாச்சி முகர்ஜி உங்களுக்கு கலை பற்றிய தொலைநோக்கு பார்வை உள்ளதாக கூறியுள்ளார்?
நேரடியான பார்வையை தாண்டி கலைப்படைப்பில் மறைந்துள்ள மர்மங்களை கண்டறிய முயல்கிறேன். அதைத்தான் அவர் கூறியுள்ளார் என நினைக்கிறேன். கலை ஆய்வாளர் அறிவியல் பூர்வமாக தனது வேலையை செய்கிறார். கலைஞர்கள், தனது செயல்பாடுகளை உள்ளுணர்வு மூலமாக செய்கிறார். இவை எல்லாமே குறிப்பிட்ட ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் நடைபெறுகிறது என்பதை ஆழமாக கவனித்தால் புரிந்துகொள்ளலாம்.
சமண ஓவியங்களில் எப்படி ஆர்வம் ஏற்பட்டது?
கலை ஆய்வாளர் மோடி சந்திரா, சமண ஓவியங்கள் பற்றி ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தினார். இந்த வகையில் ஓவியங்கைளப் பற்றி எழுதி, பேசி கண்காட்சி நடத்தி அதில் நிபுணர் ஆவது என்பது தற்செயலாக உருவானதுதான். குறிப்பிட்ட வாய்ப்பில் அப்படியான சூழல் வாய்த்தது. ஒரே மாதிரியான கலை அமைப்புகளைக் கொண்டது என சமண ஓவியங்களைப் பற்றிய கருத்து இருந்தது. நாக்பூரில் திகம்பர சமணர் கோவில் உள்ளது. இங்குள்ள கலைப்படைப்புகளை ஆராய்ந்தபோது அதில் முகலாயர்களின் பங்களிப்பு இருந்ததைக் கண்டறிய முடிந்தது. முகலாயர்கள் ராணுவ முகாம் அமைத்து தங்கியபோது, அவர்கள் இங்குள்ள கலைஞர்களை அழைத்து வந்து கலைப்படைப்புகளை செய்ய முயன்றிருக்கிறார்கள்.
தற்போது உங்களை ஊக்கப்படுத்துவது எது?
கலைவிழா, ஓவிய விழாக்கள், பீகார் அருங்காட்சியகம் திறப்புவிழா என அனைத்துமே எனக்கு ஆர்வமூட்டி வருகிறது. இப்படி சொல்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது. வரலாறு, கலைப்படைப்பு பற்றிய நிறைய விவாதங்கள் உருவாகி வருகின்றன.
கலைக்கான உதவித்தொகை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நாம் கலைப்படைப்பை ஆராய்வதை விட அதை ஆவணப்படுத்த அதிக முயற்சிகளை எடுக்கவேண்டும். ஆதாரங்கள் என்ன கூறுகிறது என்பதைக் கவனிக்கத் தொடங்கவேண்டும். மாணவர்கள் இந்த அணுகுமுறையில் நிபுணர்கள் ஆவது அவசியம்.
அருங்காட்சியகங்கள், கலை விழாக்கள் நிறைய நடந்து வருகின்றன. இதில் மக்களின் பங்கேற்பு இருக்குமா?
மக்களின் பங்களிப்பு இல்லை என்ற வாதத்தை நான் மறுக்கிறேன். கலை விழாக்களுக்கு இளைஞர்கள் பலரும் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். கலை வரலாறு பற்றிய ஆர்வம் மக்களுக்கு உள்ளது. அருங்காட்சியகங்களை உருவாக்குவது, இயக்குவது, பணியாளர்களுக்கான பயிற்சி என்பதில் அரசு, தனியார் நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டு வருகின்றன. ஆனால் இன்னுமே கூட அமைப்பு ரீதியான செயல்பாடு கைகூடவில்லை.
தி இந்து - அனிதா
saryu v doshi
கருத்துகள்
கருத்துரையிடுக