இடுகைகள்

அட்ரினலின் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆபத்திலுள்ள தனது மகனை/மகளைக் காப்பாற்ற தாயைத் தூண்டுவது எது?

படம்
  தெரியுமா? தெர்மோரெகுலேஷன் (Thermoregulation) நமது உடல் 37 டிகிரி செல்ஸியஸ் என்ற வெப்பநிலையை எப்போதும் சீராகப் பராமரித்து வருகிறது. இந்த வெப்பநிலையில்தான் மனித உடலின் செல்கள், சீராக வேலை செய்யும் பண்பைக் கொண்டுள்ளன. உடலைக் குளிர்விப்பதில் தோல், மூக்கு ஆகியவை முக்கியமானவை. வெளிப்புற வெப்பம் அதிகரிக்கும்போது , மூளையின் சமிக்ஞைப்படி தோல் உடலில் உள்ள நீரை வேர்வைத் துளைகள் வழியாக வியர்வையாக வெளியேற்றுகிறது. இதன் விளைவாக,  உடலின் வெப்பம் கட்டுப்படுத்தப்படுகிறது. மூக்கின் வழியாக உள்ளே சென்று, வெளியேறும் சுவாசக் காற்றும் உடலின் வெப்பநிலையை சீராகப் பராமரிக்க உதவுகிறது.   உணர்ச்சிகர வலிமை (Hysterical Strength) தன் குழந்தைக்கு ஆபத்து நேரும்போது, தாய் இதுவரை தன்னால் நினைத்தே பார்த்திராத செயலை செய்வார். அதாவது, காருக்குள் சிக்கிய குழந்தையை மீட்க காரை தனியாகவே தூக்குவது போல.. இப்படி நடைபெறுவதற்கு அறிவியல் ஆதாரங்கள் கிடையாது. ஆனால், உயிருக்கு ஆபத்து வரும்போது அட்ரினலின் ஹார்மோன் சுரக்கிறது. இதன் விளைவாக, குறிப்பிட்ட நேரத்திற்கு தசைகள் இறுக்கமாகி வலிமை அதிகரிக்கிறது. இந்த நிலையில் அதிவேகமாக ஓட, எடையை

பயம் ஏற்பட்டால் என்னாகும் தெரியுமா?

படம்
பயப்படும்போது உடலுக்குள் என்ன நடக்கிறது? நாம் பிறந்த தில் இருந்து நம்மை அடையாளம் காட்டுவதாக இருப்பது ஒலிதான். அது அழுகையாக, வீறிடலாக முதலில் இருக்கிறது. பின்னர், அது சூழலைப் பொறுத்து மாறுபட்டு ஏற்படுகிறது. ஆண்கள் பெரும்பாலும் உடைந்து அழுவது கிடையாது. பெண்கள் அழாமல் இருக்க வைப்பது சிரமம். பொதுவாக அபாயத்தை பார்த்து ஏற்படும் அலறல் சத்தம் மூளையிலுள்ள அமிக்டலா பகுதியை உசுப்புகிறது. இதன் விளைவாக உடல் முழுக்க அந்த அபாயத்திலிருந்து தப்ப வேண்டும் என்று நமக்கு உணர்த்துகிறது. இதனை எப்படி உணர்வீர்கள்? பாம்பு, தேள் போன்ற கொல்லும் அல்லது கடுமையாக வலி ஏற்படுத்து உயிரிகளை அருகில் பார்த்தால் உடல் தன்னிச்சையாக தன்னை பாதுகாத்துக்கொள்ள நினைக்கும். அப்போது இதயத்துடிப்பு அதிகரிக்கும். உங்களுக்கு ஒரே விஷயம்தான் தோன்றும். அந்த இடத்திலிருந்து காயம்படாமல் நாம் தப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் தான் அது. இப்போது உடலின் உறுப்புகளுக்குள் ஏற்படும் மாற்றம் பற்றி பார்ப்போம். கண்கள் கண் பார்வையின் திறன் கண்ணாடி போட்டிருந்தாலும் அதிக விழிப்பாக மாறும். உயிர் பிழைக்க வேண்டுமே? இதனால் நீங்கள் பார்க்காத கவனி

அட்ரினலின் சுரப்பு ஆபத்தா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி நாம் பயப்படும்போது உடல் நடுங்குவது ஏன்? இஎம்ஐ கட்டாதபோது, மனைவி சொன்ன காய்கறியை வாங்காதபோது, பிறந்தநாளுக்கு பார்ட்டி என்ற சொல்லை நண்பன் சொல்லுவானோ என நினைக்கும்போது நம் உடல் நடுங்கத்தொடங்கும். இதற்கு காரணம், மூளையிலுள்ள அமைக்தலா எனும் பகுதியாகும். இந்நேரத்தில் மூளையில் அட்ரினலின் வேதிப்பொருள் அபரிமிதமாக சுரக்கும். இதன் விளைவாக காந்தியின் நோஞ்சான் உடல் கொண்டவர்களின் உடலும் கூட வேகமாக முறுக்கிக்கொண்டு வலிமை பெறும். இதற்கு காரணம், அப்போது ஏற்படும் நெருக்கடிக்கு ஏற்ப அதனை சமாளிப்பதற்குத்தான். அதிகளவிலான அட்ரினலின் சுரப்பது உடலை கட்டுப்படுத்தமுடியாதபடி மாற்றிக்கொண்டிருக்கும். இதனை அறிவிக்கும் உடல்மொழிதான் உடல் நடுங்குவது. இதன் அர்த்தம் நீங்கள் ஹெர்குலஸ் போல வலிமை பெற்றவர் ஆகிறீர்கள் என்பதல்ல. அந்த நேரத்திற்கு அப்படி இருப்பீர்கள். அம்புட்டுத்தேன். நன்றி: பிபிசி

அதிர்ச்சி ஏற்பட்டால் உடல் நடுங்குகிறதா?

படம்
பயம் ஏற்படும்போது உடல் நடுங்குவது ஏன்? பொதுவாக உருட்டுக்கட்டை போன்ற நாயைப் பார்க்கும்போது, எக்ஸ்எல் சைஸ் ஆன்டியைப் பார்க்கும்போது, ஆண்டு இறுதியில் இன்கிரிமெண்டாக போடும் ஆயிரம் ரூபாயைப் பார்க்கும்போது உடல் நடுங்கும், நாக்கு குழறும். காரணம், மூளையிலுள்ள அமிக்தலா எனும் பகுதியில் மேற்சொன்ன அசம்பாவிதங்கள், ஆச்சரியங்கள் நடக்கும்போது, அட்ரினலின் சுரக்கத் தொடங்கும். பயம், சண்டை இரண்டுக்குமான டபுள் டூட்டி ஹார்மோன் இதுவே. சூழலைப் பொறுத்து ஆச்சரியப்படவோ, ஆவேசப்படவோ காரணம் இந்த சுரப்பிதான். அட்ரினலின் அளவு அதிகரிக்கும் போது உடலின் தசைகளால் நடுக்கமுறுவதைத் தடுக்க முடியாது. மெல்ல இதயத்துடிப்பை அமைதியாக்க நான்கைந்து முறை மூச்சை இழுத்து விட்டால் எதிர்பார்ப்பு, அதிர்ச்சி குறைந்து உடல் நார்மல் மோடுக்கு வரும். தகவல், படம்: பிபிசி