ஆபத்திலுள்ள தனது மகனை/மகளைக் காப்பாற்ற தாயைத் தூண்டுவது எது?

 












தெரியுமா?

தெர்மோரெகுலேஷன் (Thermoregulation)

நமது உடல் 37 டிகிரி செல்ஸியஸ் என்ற வெப்பநிலையை எப்போதும் சீராகப் பராமரித்து வருகிறது. இந்த வெப்பநிலையில்தான் மனித உடலின் செல்கள், சீராக வேலை செய்யும் பண்பைக் கொண்டுள்ளன. உடலைக் குளிர்விப்பதில் தோல், மூக்கு ஆகியவை முக்கியமானவை. வெளிப்புற வெப்பம் அதிகரிக்கும்போது , மூளையின் சமிக்ஞைப்படி தோல் உடலில் உள்ள நீரை வேர்வைத் துளைகள் வழியாக வியர்வையாக வெளியேற்றுகிறது. இதன் விளைவாக,  உடலின் வெப்பம் கட்டுப்படுத்தப்படுகிறது. மூக்கின் வழியாக உள்ளே சென்று, வெளியேறும் சுவாசக் காற்றும் உடலின் வெப்பநிலையை சீராகப் பராமரிக்க உதவுகிறது.  

உணர்ச்சிகர வலிமை (Hysterical Strength)

தன் குழந்தைக்கு ஆபத்து நேரும்போது, தாய் இதுவரை தன்னால் நினைத்தே பார்த்திராத செயலை செய்வார். அதாவது, காருக்குள் சிக்கிய குழந்தையை மீட்க காரை தனியாகவே தூக்குவது போல.. இப்படி நடைபெறுவதற்கு அறிவியல் ஆதாரங்கள் கிடையாது. ஆனால், உயிருக்கு ஆபத்து வரும்போது அட்ரினலின் ஹார்மோன் சுரக்கிறது. இதன் விளைவாக, குறிப்பிட்ட நேரத்திற்கு தசைகள் இறுக்கமாகி வலிமை அதிகரிக்கிறது. இந்த நிலையில் அதிவேகமாக ஓட, எடையைத் தூக்க வாய்ப்புள்ளது. அட்ரினலின் ஹார்மோனால் உடலில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க  லாக்டிக் அமிலத்தை உடல் சுரக்கிறது.     


https://www.yourhormones.info/hormones/adrenaline/


 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்