பெண்களுக்கு ஆடுகள் தரும் பொருளாதார சுதந்திரம்! - ஆகாகான் பௌண்டேஷனின் உதவி!









 ஆடுகள் தரும் பொருளாதார சுதந்திரம்!




இந்தியா, டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தில் உச்சம் தொட்டுள்ளது.  இக்காலத்திலும் கிராமப்புற இந்தியாவை வேளாண்மையும், கால்நடைகளும்தான் தாங்கிப்பிடிக்கின்றன. கிராமங்களில் வீட்டில் வாழும் பெண்கள், கால்நடைகளை வளர்த்தே குடும்பச் செலவுகளைச் சமாளிக்கின்றனர்.   பெண்களின் பொருளாதார மேம்பாட்டுக்கென, தன்னார்வ அமைப்பான  ஆகாகான் பௌண்டேஷன் திட்டங்களை உருவாக்கி வருகிறது. இந்த அமைப்பு, ஆடுகளுக்கான மருத்துவ உதவிகளை வழங்கும் வகையில்,  கிராம பெண்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சி அளிக்கிறது. இதன்மூலம் பெண்கள், ஆடுகளுக்குத் தேவையான மருந்துகள், சிகிச்சையை வழங்கி அதற்கென குறிப்பிட்ட தொகையை சேவைக்கட்டணமாகப் பெறுகின்றனர். இது பெண்களுக்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்குகிறது. 

கிராமத்தில் ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கும் செவிலியர்களுக்கு, பாசு ஷகி (pashu sakhi) என்று பெயர். இதற்கு இந்தி மொழியில், ’விலங்குகளின் நண்பன் ’என்று பொருள். இந்தியாவில் வாழும் கால்நடைகளின் எண்ணிக்கை, 13 கோடியே 50 லட்சம் ஆகும். நோய்க்கு முறையான மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் இறக்கும் கால்நடைகளின் எண்ணிக்கை 40 சதவீதமாக உள்ளது. இதைத்தடுக்க ஆகாகான் பௌண்டேஷன் உதவுகிறது. பீகாரில் 200க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பயிற்சியளித்து ஆடுகளைப் பராமரிக்க உதவியுள்ளது. ”பெண்களுக்கு எளிதாக பணம் பெறும் வழியாக ஆடுகளே உள்ளன. எனவே, அவற்றை பராமரிக்க உதவுவதன் மூலம் அவர்களின் வாழ்க்கை மேம்படும்” என்றார் ஆகாகான் பௌண்டேஷன் இயக்குநரான டின்னி சாஹ்னி. 


https://www.livemint.com/mint-lounge/features/meet-the-pashu-sakhis-of-rural-bihar-11583474740594.html

https://www.akdn.org/search?text=project%20mesha

கருத்துகள்