சுமாரான காபி, வேகாத சமோசா! - கடிதங்கள் - கதிரவன்
20.2.2022
மயிலாப்பூர்
அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா?
தேர்தல் வேலைகள் முடிவுக்கு வந்திருக்கும். நாங்கள் வேலை செய்யும் கட்டிடத்திற்குள் தேர்தல் பணிகள் நடைபெற்றது. உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தல்.மக்கள் குறைவாகவே வந்தனர். அன்று லீவ் என்பதால் பலரும் பிரியத்தோடு கோழி வாங்கி சுத்தம் செய்து கறிக்குழம்பு வைத்து சாப்பிட்டிருப்பார்கள். அனுபவிப்பதுதான் வாழ்க்கை. வாக்கு சதவீதம் குறைந்து போய்விட்டது. வாக்களிக்கும் ஆர்வம் இயல்பாகவே காலப்போக்கில் குறைந்து வருகிறது. வாக்களிப்பதால் என்ன பயன் என மக்கள் நினைக்கிறார்கள்.
நான் இன்று சக்தி சாரின் அறைக்குச் சென்றேன். அங்கு இருவரும் சேர்ந்து படம் பார்த்தோம். கேம்பஸ் ஹோட்டலுக்குச் சென்று புட்டு, கடலைக்கறி, ஆப்பம் சாப்பிட்டோம். கேரள முஸ்லீம் ஒருவர் நடத்துகிறார். சைவ, அசைவம் இரண்டுமே நன்றாக இருக்கும் போல. சக்திசார் பணம் கொடுத்தார். பதிலுக்கு நான் மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் கால்கிலோ வாங்கிக் கொடுத்துவிட்டேன். கிளம்பும்போது பிக் பஜார்சென்றோம். அங்கு சென்று காப்பி மட்டும் நான் குடித்தேன். அவர் சாப்பிட்ட சமோசாவில் உருளைக்கிழங்கு வேகவில்லை. காபி சுமார்தான். காம்போவாக இரண்டுமே ரூ.19 தான்.
சமோசா இன்ஸ்டன்ட். அதை எண்ணெய்யில் பொரித்து தருகிறார். ஆனால் சரியாக வேகவில்லை. புத்தக திருவிழாவிற்கு சென்று இயற்கை தொடர்பான இரு நூல்களை வாங்கினேன்.
நன்றி!
அன்பரசு
கருத்துகள்
கருத்துரையிடுக