கெவூடில் நாயைப் பராமரிப்பது எப்படி?

 







பெரும்பாலான மக்கள் இன்று  அபார்ட்மெண்ட், வில்லா என வசிக்கத் தொடங்கிவிட்டனர். இவர்களுக்கு ஏற்றதுபோலத்தான் செல்லப்பிராணிகளையும் வளர்க்கிறார்கள். அப்படியல்லாதபோது அது தனிப்பிரச்னையாக மாறிவிடும். கெவூடில், கெவாலியர் கிங் சார்லஸ் ஸ்பேனியல், பூடில் என இரு நாய் இனங்கள் சேர்ந்து உருவான நாய் இனம். சிம்பிளாக கிராஸ் ப்ரீட். சாலா கலப்பினம் ....லயன் +டைகர் = லைகர் போலத்தான். 


வீட்டுக்குள் இருந்தாலே போதும்....

கெவூடில் பெரும்பாலும்  வீட்டுக்குள் அறைக்குள் இருக்க நினைக்கும் நாய் தான். கூடவே அதன் சகாவாக மனிதர்கள் இருக்கவேண்டும். இல்லையெனில் விரைவில் ஏங்கிப்போய்விடும்.  பொதுவாக இதன் உயரம் 40 செ.மீ. எடை 5 முதல் 12 கி.கி தான். சிறியதாக இருக்கும். எளிதாக கையாளலாம். கன்றுக்குட்டி போல இருந்தால் பாசத்தால் மேலே தாவினால் ஓனரை ஐசியூவில் வைத்து காப்பாற்ற வேண்டியிருக்கும். சில கட்டளைகளை சொல்லி முதலிலேயே பழக்கினால், அதை கெவூடில் கேட்கும். பின்பற்றும். குறிப்பாக வெளியில் சென்று மலம் கழிப்பது, சிறுநீர் பெய்வது ஆகியவற்றை....

வியாபாரம் வேண்டாமே?

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் இருக்கிறார். அவர் குடும்பத்தொழிலே ஆடை விற்பது என்பதால், உடை என பேச்செடுத்தாலே  என்னிடம் ஆடை வாங்குங்கள்  என விற்பனையைத் தொடங்குவார். என்ன சொன்னாலும் கேட்கமாட்டார். கெவூடில் நாய் விற்பனையும் இப்போது பண்ணை வைத்து செய்யுமளவு முன்னேறிவிட்டது. நீங்கள் அங்கே சென்று வாங்குவது சரியானதல்ல. தெரிந்தவர்கள் மூலம் கெவூடில் நாயைப் பார்த்து எப்படி வளர்க்கப்படுகிறது என கவனித்து நாயை வழங்குங்கள். அமேசான், ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட தளங்களில் நாயை வாங்குவது சரியானதல்ல. 

சலூன் ரெடி 

கெவூடில் நாய்க்கு முடி அதிகம் கொட்டாது. எனவே, அறையை அடிக்கடி தூய்மை செய்யவேண்டியதில்லை. ஆனால் நாய்க்கு முடி வேகமாக வளருவதால், பிலிப்ஸ்,பானாசோனிக்கில் ஆர்டர் செய்து ட்ரிம்மரை வாங்குவது நல்லது. அப்போதுதான் நாயின் முடியை வெட்டி அதற்கு பார்வை தெரியுமாறு செய்யமுடியும். நாயின் கண்களை தினசரி சுத்தம் செய்வது அவசியம். 


தனிமை தேவை 

ஆன்மத்துணை என்றாலுமே கூட  அவரவர்க்கான இடைவெளி கொடுக்கவேண்டும். இல்லையெனில் போடா மயிறு விவாகரத்து கேட்குமளவு பிரச்னை முற்றும். கெவூடில் நாய்க்கும் அப்படித்தான் புரிந்து நடந்துகொள்வது முக்கியம். நாய் சற்று தளர்வாக சோர்வாக இருக்கும்போது அதனைக் கட்டிப்பிடித்து தூக்கி எரிச்சல் ஊட்டக்கூடாது. அப்போது கெவூடில் தனது பற்களின் கூர்மையை உங்கள் தசையில் சோதித்துப் பார்த்துவிடும். 

பாசமும் சண்டையும்

குழந்தைகளை கெவூடில் நாய்கள் பொறுத்துக்கொள்ளும்தான். ஆனாலும் எல்லை தாண்டிய லொள்ளு செய்தால் பொறுக்காது. எனவே, முடிந்தளவு நாய்களோடு குழந்தைகள் தனியாக இருக்குமாறு சூழலை குறைத்துக்கொள்ளுங்கள். நாய்க்கும் மஞ்சிதி, குழந்தைக்கும் மஞ்சிதி....

ரீடர்ஸ் டைஜெஸ்ட் 







கருத்துகள்

பிரபலமான இடுகைகள்