சவால் விடும் காதலிக்காக நண்பர்களை ஏமாற்றி பாங்காங் செல்லும் அக்மார்க் காதலன்! -டிஸ்கோ -நிகில் சித்தார்த், சாரா சர்மா
டிஸ்கோ
நிகில் சித்தார்த், சாரா சர்மா இன்னும் உங்களின் அபிமான நட்சத்திரங்கள் பலர்
தெலுங்கு
டிஸ்கோ, நண்பர்களுக்காக உயிரைக் கொடுக்க கூடியவன். அதேசமயம் அவனுக்குத் தேவையென்றால் நண்பர்களென்று பாராமல் சித்திரவதை செய்தாவது தேவையானதைப் பெற்றுக்கொள்ள தயங்காத ஆள். அப்படிப்பட்டவன், நண்பன் ஒருவனுக்கு ரௌடி ஒருவரின் குடும்பத்தில் திருமணத்தை செட் செய்கிறான். பிறகு, அதற்காக பார்ட்டி செய்வோம் என நண்பர்களை பாங்காங்கிற்கு அழைத்து செல்கிறான். இதற்கான பணம் வங்கியில் கடன் வசூலிக்கும் வேலையில் இருந்து கிடைக்கிறது. கிடைக்கிறது என்பதை விட பாஸ்கர பட்லா என்ற சிறு ரௌடியின் ஆட்களை அடித்துப் புரட்டி பணத்தைப் பெறுகிறார்கள். அந்தப் பணம் தெலுங்கு பேசும் டான் ஒருவருக்கு சொந்தம் என பில்ட் அப் கொடுக்கிறார்கள். உண்மையில் அந்த பணம் யாருடையது, அவர் பாங்காங்க் செல்லும் நான்கு நண்பர்களையும் பழிவாங்கினாரா என்பதே கதை.
படம் பாதி நேரம் எதைநோக்கி செல்கிறது என்றே தெரியாமல் பயணிக்கிறது. அந்த நேரலத்தில் எல்லாம் நம்மை காப்பாற்றுவது நிகில் சித்தார்த்தான். அவர் தான் படத்தில் டிஸ்கோ. இவரின் அசல் கோளாறு குணத்தால் அவரது நண்பர்கள் விழி பிதுங்குகிறார்கள். டிஸ்கோ ஒரு அனாதை. அவனுக்கு ஒரே உறவு மூன்று நண்பர்கள்தான். இவர்களை வைத்து காமெடி செய்துதான் டிஸ்கோவின் பிழைப்பே ஓடுகிறது. படம் நெடுக கலாய்த்தல்தான். இதில் சென்டிமெண்ட் என ஏதுமே ஒட்டவில்லை. படத்தில் டிஸ்கோ ஏற்படுத்தும் பாதிப்புகளால் தடுமாறி விழி பிதுங்கி நிற்கும் நண்பர்கள் ஒருமுறை போலீசில் சிக்கிக்கொள்கிறார்கள். அதற்குப் பிறகுதான், நாம் வேலைக்கு போகவேண்டும் என நினைக்கிறார்கள். அதற்கு எம்எஸ் நாராயணா உதவுகிறார். எனவே, நால்வரும் வங்கிக்கு சென்று கடன் வசூலிக்கும் வேலைக்கு சேர்கிறார்கள். அதில் அவர்களுக்கு செம ஊத்தல்தான். உப்புமா தோசை அனுபவம்தான் கிடைக்கிறது.
டிஸ்கோவைப் பொறுத்தவரை வேலையைக் கூட பக்கனே பெட்டண்டி டப்பு அவசியம் என்பதுதான் ஒரே கொள்கை. பிற மூன்று நண்பர்களும் அதை ஏற்றே ஆகவேண்டிய கட்டாயம். அப்படித்தான், நண்பனது கல்யாண பேச்சுலர் பார்ட்டி என டிஸ்கோ நண்பர்களை பாங்காங்கிற்கு கூட்டி வருகிறான். அங்கு வந்தபின் பார்த்தால், தெலுங்கு டான் ஒருவரின் பெண்ணை நூல் விட்டுப் பார்க்கிறான். அடப்பாவி என்று நண்பர்கள் பதற, பிளாஷ்பேக் சொல்லுகிறான். அதாவது, பணக்கார ஹீரோயினை போன ஆண்டு காதலர் தினத்தில் பார்த்துவிட்டு ரோஸ் கொடுக்கிறான். பதிலுக்கு அவளின் பாடி கார்டுகள் செமத்தியாக உதை கொடுக்கிறார்கள். பதிலுக்கு இவனும் உதைக்கிறான். ஆனால் இறுதியாக பணக்காரி முடிந்தால் என்னை பாங்காங் வந்து பார். அப்புறம் என் காதலைச் சொல்லுகிறேன் என்கிறாள். அதற்காகவே நாயகன் நாயாய் அலைந்து நண்பர்களை பயன்படுத்தி காதலியை கைபிடிக்க நினைக்கிறான்.
இந்த நேரத்தில் ஒரு ட்விஸ்ட். அதுதான். பணக்கார காதலி சேட்டு பையன் போல செவச்செவப்பாக இருக்கும் பணக்காரன் ஒருவனை காதலிக்கிறாள். ஆனால் இதை அப்பாவிடம் சொல்லாமல் ஓடிப்போய் கல்யாணம் செய்ய நினைக்கிறாள். இதனால் இரண்டு நிமிஷம்தான் டிஸ்கோ வருத்தப்படுகிறான். பிறகு இரு காதலர்களையும் ஒன்றாக சேர்த்து வைப்பதாக உடனே இன்ஸ்டன்ட் முடிவு எடுக்கிறான். இதற்கென பாரில் உள்ள அலி கூட சகாயம் செய்ய ஒத்துக்கொள்கிறார். உண்மையில் காதலர்களை டிஸ்கோ ஒன்று சேர்க்குமளவு நல்லவனா, அல்லது நய வஞ்சகனா என்பதுதான் கதை. படத்திற்கு டிஸ்கோ என பெயர் வைத்திருக்கிறார்கள். இவன் ஒரு லூசு என வைத்திருக்கலாம். படத்தில் காட்சிகள் அப்படித்தான் இருக்கின்றன. நிகில் வீடு தேடா என்ற படத்தில் கூட நடித்திருக்கிறார். அது இந்த படத்தின் பாதிப்பிலா என்று தெரியாது. படத்தில் பாடல்கள், நிகிலின் அசகாய நடனம் சிறப்பாக இருக்கிறது. ஆனால் காதலியாக வருபவர், நிகிலுக்கு அக்கா முறையா என்று கேட்கும்படி ஆடம்பர சொகுசு பங்களா கணக்காக பிரமாண்டமாக இருக்கிறார். அவர் ஆடும் குத்துப்பாட்டு மட்டும்தான் அவருக்கு மிகச்சரியாக பொருந்துகிறது. வேறு வேலைக்காக வந்தவர் படத்திலும் நாயகியாக நடித்துவிட்டு போயிருக்கிறார் போல....
காமெடிதான் படத்தின் பெரும்பலம். மற்றபடி கதை எல்லாம் எங்கே போகிறது எதை நோக்கி என்பதைப் பற்றி இயக்குநரும் கண்டுகொள்ளவில்லை. நாமும் அதைப் பற்றி ஏன் கவலைப்பட்டுக்கிட்டு...
சும்மானாச்சிக்கு ஒரு படம்
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக