இங்கிலாந்தில் அழிந்துவரும் ஹாசல் டோர்மவுசைக் காப்பாற்ற முயலும் ஆராய்ச்சியாளர்!

 










இயான் வொய்ட்

இங்கிலாந்து ஆராய்ச்சியாளர் 




இயான் வொய்ட் 


இங்கிலாந்தில் உள்ள டோர்மைஸ் என்ற சிறு விலங்கு அழிவின் விளிம்பில் உள்ளது. ஏற்கெனவே அங்குள்ள 17 கவுண்டியில் இந்த விலங்கு அழிந்துவிட்டது. 2022 ஆம் ஆண்டு இயான் வொய்டின் பீப்புள் ட்ரஸ்ட் ஃபார் என்டேஞ்சர்ட் ஸ்பீசிஸ் என்ற அமைப்பு, டோர்மைஸைக் காப்பாற்ற முயன்று வருகிறது. 

டோர்மைஸ் சிறு விலங்கினத்தை காப்பாற்ற என்ன செய்து வருகிறீர்கள்?

தேசிய டோர்மவுஸ் கண்காணிப்பு நிகழ்ச்சியை  நான் உருவாக்கி நிர்வாகம் செய்து வருகிறேன். இந்த சிறு விலங்கின் சூழல், இயற்கையில் இதன் பங்கு, இனப்பெருக்கம் பற்றியும் ஆராய்ந்து வருகிறேன். 

பிறர் டோர்மவுசைப் பாதுகாக்க ஒத்துழைக்கிறார்களா?

அது சோகமான விஷயம்தான். இப்படி எலியை ஒத்த விலங்கு அழிந்து வருகிறது என்றால் பலரும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. 2000ஆம் ஆண்டு ஹாசல் டோர்மவுஸ் எண்ணிக்கை 50 சதவீதம் குறைந்துவிட்டது. பிறகுதான் அரசு அமைப்புகளும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் சிறு விலங்கினத்தை பாதுகாக்க முனைந்தன. 

என்ன சவால்களை சந்தித்தீர்கள்?

வாழிடங்களே மிகவும் குறைந்துவிட்டன. எங்கு பார்த்தாலும் சாலைகள், ரயில் நிலையங்கள், பேருந்து என போக்குவரத்துதான். இதனால் அவை வாழ்வதற்கான இடங்களைக் கண்டுபிடித்து அவற்றை இடம்பெயரச் செய்வதே கடினமாக இருந்தது. நாங்கள் இந்த வகையில் 30 டோர்மவுஸ் எலிகளை லங்காஷையர் காட்டில் விட்டுள்ளோம். இவை காலப்போக்கில் பெருகும் என நம்புகிறோம். வுட்லேண்ட் காட்டை தேசிய அறக்கட்டளை சிறப்பாக பராமரித்து வருகிறது. 

பிபிசி வைல்ட்லைஃப் 









கருத்துகள்