குருநாதரின் ஸ்பீடையும், ஸ்டாமினாவையும் நெருங்கவோ, மேட்ச் செய்யவோ முடியாது! கடிதங்கள் - கதிரவன்

 






எனது ஆசான் திரு. கே.என்.சிவராமன்



21.10.2021

அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். 

நலமாக இருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் அப்பா, அம்மாவின் நலனை விசாரித்ததாக சொல்லுங்கள். நவ.1 இல் அரசு சொன்னபடி பள்ளி தொடங்கினால், எங்கள் மாணவர் இதழ் 15ஆம் தேதி தொடங்கும் என நினைக்கிறேன். 

பிரன்ட்லைன் இதழ்களுக்கு கட்டிய சந்தா இன்னும் இரு இதழ்களோடு முடிவுக்கு வருகிறது. இதில் வரும் கட்டுரைகள் படிக்க நிறைய தகவல்களோடு உள்ளன. எல்லாமே ஆழமாக கருத்துகளை கொண்டவரை. படிக்க சற்று அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் இதழ் இதுவே. டி.கே. ராஜலட்சுமி என்ற கட்டுரையாளர் எனக்கு பிடித்தமானவர். எழுதும் கட்டுரைகளில் தனது மனிதநேயம், அக்கறையை எப்படியாவது சொல்லிவிடுகிறார். 

இப்போது ரெடிமேட் சட்டைதான் அணிகிறேன். ஃபேஷன் கம்போர்ட் என்ற கடையின் உடைகள் எனக்கு பொருத்தமாக இருக்கின்றன. அங்கு தான் 1450 ரூபாய்க்கு சட்டை, பேண்ட் வாங்கினேன்.  காலை எட்டு மணிக்கு ஆபீஸ் போய்விடுகிறேன். இதனை ஆசான் கேஎன்எஸ்சிடமிருந்து கற்றது. இப்போது ஆசான் என்னையும் மிஞ்சி ஏழுமணிக்கு ஆபீசுக்கு வந்துவிடுகிறார். இப்போதும் அவரின் உழைப்பு ஒரு அடி முன்னாடி தான் இருக்கிறது. வேகத்தையும் ஆற்றலையும் மேட்ச் செய்யவே முடியவில்லை. பிடிக்கவும் முடியவில்லை. 

மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர் என்று தெலுங்குப்படம் பார்த்தேன். ஹர்ஷா, விபா என இருவருக்குமான காதலும் கலாட்டாவும்தான் கதை. இதில் விபா, கல்யாணம் எதற்கு என்ற கேள்வியை உருவாக்கி பதில் கேட்க ஹர்ஷாவுக்கு பதில் தெரியவில்லை. பதிலை எப்படி தேடி கண்டுபிடிக்கிறான் என்பதுதான் படம்.  படத்தை வடபழனி பாலசோ தியேட்டரில் சன் மோகனுடன் பார்த்தேன். தியேட்டர் புல் தான். டிக்கெட் விலை ரூ. 102. நன்றி!

அன்பரசு 


 


 

கருத்துகள்