இடுகைகள்

டென்சென்ட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சீனாவில் சாதித்த தொழில்நுட்ப நிறுவனங்களின் வெற்றிக்கதை!

 சீனா டிஸ்ட்ரப்டர்ஸ்  சீன டெக் நிறுவனங்களின் கதை கட்டுரை நூல் இந்த ஆங்கில நூல், மேற்குலகு கொண்டிருக்கும் சீனா மீதான மூடநம்பிக்கைகளுக்கு சவால் விடுகிறது. சீன பொருள் என்றால் மட்டமானது. நிறுவனம் என்றால் மோசடி செய்யக்கூடியது என வலுவான பிரசாரத்தை செய்துவருகிறார்கள். அதை உடைத்து வரும் முக்கியமான நிறுவனங்களான அலிபாபா, டென்சென்ட், ஹூவெய், ஷாவ்மி, ஹெங்கன், லெனோவோ, ஹெயர் ஆகிய நிறுவனங்களைப் பற்றி விரிவாக விளக்குகிறது.  வணிக நிறுவனங்களோடு நிறுத்திக்கொள்ளாமல், சீனாவில் உள்ள அரசியல், அதற்கு டெக் நிறுவனங்கள் செய்துகொள்ள வேண்டிய சமரசம் பற்றியும் பேசியுள்ள நூல் என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது. வணிக ரீதியான விஷயங்களோடு அரசியலும் பின்னிப்பிணைந்துள்ளது. அப்படியல்லாமல் சீனாவில் எந்த வணிக நிறுவனமும் வளர முடியாது. அந்த வகையில் அலிபாபா, ஹூவெய் ஆகிய நிறுவனங்கள் முன்னிலை பெறுகின்றன. அலிபாபா உள்நாட்டில் சிறப்பான கட்டமைப்பைக் கொண்டுள்ளது. ஹூவெய் உள்நாட்டில் மட்டுமல்லாது, வெளிநாட்டிலும் தனது செயல்திறனை நிரூபித்துள்ளது. அதைபற்றி விவரிக்கும் பகுதி சுவாரசியமாக உள்ளது. இன்று அந்த சீன நிறுவனத்திற்கு ஒரே...

துறை சார்ந்த பிரபலங்கள், தங்கள் இதயத்தை திறந்து பேசும் பொதுமேடை உரையாடல்!

படம்
            துறை சார்ந்த பிரபலங்கள், தங்கள் இதயத்தை திறந்து பேசும் பொதுமேடை உரையாடல்! டெட் டாக்ஸ் உரைகளை யூட்யூபில் பார்த்திருப்பீர்கள். அதில் துறை சார்ந்த பிரபலம் ஒருவர், மேடைக்கு வந்து தன்னுடைய அனுபவங்களை அங்கு கூடியுள்ள மக்களிடம் பகிர்ந்துகொள்வார். அவர் தொழிலதிபராக, திரைப்பட இயக்குநராக, பாடகராக, விளையாட்டு வீரராக இருக்கலாம். தனது அனுபவங்களை கூடியுள்ள மக்களுக்கு கடத்துகிறார். இந்த பேச்சு நீண்டதாக இருக்கலாம். அல்லது சிறியதாக இருக்கலாம். ஆனால், ஒருவர் தன்னுடைய கதையை பிறருக்கு கூறுகிறார். கதை சொல்லும், அதை கேட்கும் ஆர்வம் உடையவர்கள்தான் நாம். எனவே டெட் டாக்ஸ் மகத்தான வெற்றி பெற்று உள்ளது. இதை நகல் செய்து டென்சென்ட் நியூஸ் நிறுவனம் சீனாவில் 2016ஆம் ஆண்டு ஸ்டார் டாக்ஸ் என்ற நிகழ்ச்சியைத் தொடங்கியது. இதில், நூறு துறை சார்ந்த பிரபலங்கள் தங்கள் அனுபவங்களை பேசுவார்கள். மக்கள் அவர்களின் அனுபவங்களை கேட்டு ரசிக்கலாம். இது மக்களில் பலருக்கு ஊக்கமூட்டுவதாக அமைந்துள்ளது. பிரபலங்கள் தங்களுடைய தொழில் வாழ்க்கையைக் கடந்து, வேறு தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களையும்  கூறுகி...

அமெரிக்காவைத் தாயகமாக கொள்ளாத பெரு நிறுவனங்கள்! முன்னிலை வகிக்கும் அலிபாபா!

படம்
          அமெரிக்காவைத் தாயகமாக கொள்ளாத பெரு நிறுவனங்கள் இவை சாப்ட் பேங் டோக்கியோ ஜப்பான் 89.7 பில்லியன் ஜப்பானைச் சேர்ந்த சாப்ட் பேங்க் பெரும்பாலும் ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்து வெற்றி பெற்றுவருகிறது. உபர், பைட்டான்ஸ் ஆகிய நிறுவனங்களில் நிறைய முதலீடு செய்துள்ளது. முதலீட்டு விஷயங்களை விஷன் ஃபண்ட் என்ற நிறுவனம் செய்து வருகிறது. தற்போது செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் மீது கவனம் செலுத்த முயன்று வருகிறது.லாபம் வராத வீவொர்க் நிறுவனத்திற்கான முதலீட்டை முட்டாள்தனதானது என்பதை பகிரங்கமாக ஒப்புக்கொண்டுவிட்டார் இதன் சிஇஓவான மசோயாஷி சன். டிசிஎஸ் 100. 7 பில்லியன் மும்பை, இந்தியா இந்த நிறுவனத்தை டாடா குழுமம் இயக்குகிறது. இந்த குழுமம் உப்பு, உரம், இரும்பு, வேதிப்பொருட்கள், வாகனங்கள் என பல்துறை சார்ந்தும் இயங்குகிறது. கோவிட் -19 சார்ந்து பல்வேற செயல்பாடுகளை அரசுடன் இணைந்து செய்துள்ளது டாடா. ஏஎஸ்எம்எல் ஹோல்டிங் 124.5 பில்லியன் டாலர் வெல்தோவன், நெதர்லாந்து பெரு நிறுவனங்களின் பட்டியலில் உள்ள டச்சு நிறுவனம் இது ஒன்றுதான். மென்பொருள், வன்பொருள் ஆகிய நிறுவனங்களை தனது வாடிக்கையாளர்க...

உலகை மிரட்டிய சீன விளையாட்டுகள் 2019!

படம்
மேற்குலகினரின் விளையாட்டுகள் பெரும்பாலும் தனிக்கருவிகள் சார்ந்தவை. அதாவது அவற்றை விளையாட குறைந்த பட்சம் கணினிகள், தனிக்கருவிகள் தேவை. ஆனால் மொபைல் விளையாட்டுகளை சீனா ஊக்குவிக்கிறது. இந்த துறையில் சீன நிறுவனங்களே வெற்றியாளர்களாக உள்ளன. அங்கு 459 மில்லியன் பயனர்களை விளையாட்டுகளை வெறித்தனமாக விளையாண்டு வருகின்றனர். CALL OF DUTY MOBILE பல்வேறு சூழல்கள், அதிநவீன துப்பாக்கிகள், ட்ரோன் விமானங்கள் என படு நவீனமாக விளையாட்டு உள்ளது. மொபைலில் விளையாடுவதற்கு பெரிய மாறுதல்களின்றி உள்ளது. அசத்தலான விளையாட்டை டென்சென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.  PUBG MOBILE பாராசூட்டில் தனித்தீவு போன்ற இடத்திற்கு சென்று இறங்கியவுடன் கொலைத்தாண்டவத்தை தொடங்க வேண்டும். உங்களின் குழுவினருடன் பேசியபடி, எதிரிகளை நெற்றிப்பொட்டில் பட்டென போட்டு நிமிரலாம். மகத்தான வெற்றி பெற்ற விளையாட்டு டென்சென்ட் நிறுவனத்தின் தயாரிப்பு.  ONMYOJI நெட் ஈசி நிறுவனத்தின் தயாரிப்பு. ஜப்பானி புராணக்கதைகளின்படி விளையாட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அழகான பின்புலங்கள், குரல்கள் ஆகியவை பயனர்களை வெகுவாக ஈர்த்துள்ளன....