ஜவகர்லால் நேரு சொன்னவை....
ஜவகர்லால் நேரு சொன்னவை.... 1.நான் மதவெறியை விரும்பாதவன். அது பலவீனமடைந்து வருவதைப் பற்றி மகிழ்ச்சி அடைகிறேன். வகுப்புவாதம் எந்த வடிவில் அல்லது உருவத்தில் வந்தாலும் அதையும் நான் விரும்பாதவன். 2.எந்தக் கொடியைச் சுற்றி நீங்கள் திரண்டு நிற்கிறீர்களோ, நீங்கள் வணக்கம் செலுத்துகிறீர்களோ, அந்தக் கொடி எந்த சமூகத்தையும் சேர்ந்ததல்ல. இது தாய்நாட்டின் திருக்கொடி. 3.நான் சோஷலிஸ்டு, ஒரு குடியரசுவாதி என்பதை மறைக்காமல் கூறவேண்டும். அரசர்கள், மன்னர்களைக் கொண்ட அமைப்பை அல்லது தொழில்துறை அரசர்களை உருவாக்குகின்ற அமைப்பில் எனக்கு நம்பிக்கை கிடையாது. 4.பண்டைக்கால அரசர்களைக் காட்டிலும் தொழில் அரசர்கள் மக்களின் வாழ்க்கையையும் விதிகளையும் நிர்ணயிப்பதில் மிகவும் அதிகமான அதிகாரத்தைக் கொண்டிருக்கிறார்கள். கொள்ளைக்கார முறைகளையே அவர்கள் கடைபிடிக்கிறார்கள். 5.சிறுபான்மையினருடைய பண்பாட்டிற்கும் மரபுகளுக்கும் ஆபத்து ஏற்படாது என்று நமது பேச்சு மற்றும் செயல்கள் மூலம் முழுமையாக உறுதியளிக்க வேண்டும் என்பதை மட்டும் நான் மீண்டும் வலியுறுத்துவேன். 6. யாருடைய நன்மைக்காக தொழில் நடைபெறவேண்டும், யாருடைய ந...