இடுகைகள்

மேஜிக் சினிமா! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனிதர்களும் விலங்குகளும் இணையும் புள்ளி! - ஸ்மால்ஃபூட்

படம்
மேஜிக் சினிமா Smallfoot மிகோவின் உலகில் அனைத்து ம் கற்கள்தான். கற்களால்தான் அவர்களின் உலகே இயங்குகிறது என கிராமத்தின் தலைவர் அவர்களை நம்ப வைக்கிறார். ஆனால் பனிகிராமத்தின் சில கி.மீட்டர்களுக்கு கீழே மனிதர்கள் வாழும் நகரம் உள்ளது. ஆனால் அதனை கிராமத்தலைவர் திட்டமிட்டு மறைக்கிறார். உண்மையை மிகோ கண்டுபிடித்தாலும் அதனை ஊராருக்கு சொல்லக்கூடாது என அவனை மிரட்டுகிறார் கல் கிராம தலைவர். அதற்கு காரணம் என்ன? தான் சொல்லிய உண்மைக்கு புறம்பாக மிகோ மாறுவதற்கு பின்னாலுள்ள பிரச்னைகள் என்ன என்பதை ஆடல், பாடல் கொண்டாட்டத்துடன் சொல்லும் படம்தான் ஸ்மால்ஃபூட். ஸ்பானிய அனிமேட்டர் - திரைக்கதை எழுத்தாளர் செர்ஜியோ பாப்லோஸ் எழுதிய யெடி ட்ராக்ஸ் என்ற நூலை தழுவி படம் உருவாகியுள்ளது.  சேவல் கூவி சூரியன் உதிக்கிறது என கூறுவார்களே, அதேபோல மிகோவின் தந்தை தலையில் கல்லை கட்டி இரும்பு பலகையில் தலையால் வேகமாக முட்டி சூரியனை எழுப்புவதாக நினைத்து கொண்டிருக்கிறார். ஆனால் ஊர் முழுக்கவே அப்படி நம்ப வைத்திருப்பது அவர்களின் தலைவர்தான். ஆனால் அவரின் மகள், அதிலிருந்து வேறுபட்டு தன்னையொத்த இளைஞர்கள

தனுஷின் அகதிப் பயணம்!

படம்
தாயின் கனவைத்தேடும் நாடோடி! தாயிடம் தந்தை யார், நாம் வசதியானவர்கள் கிடையாதா? வெகுளியாக கேள்வி கேட்கும் சிறுவன் பின்னாளில் நிலைமை புரியும்போது நாடோடி மாயாஜாலக்காரனாக மும்பையில் போலீசுக்கு தப்பி ஓடிக்கொண்டிருக்கிறார். பெரிய லட்சியமெல்லாம் கிடையாது. டுபாக்கூர் ட்ரிக்ஸ் மூலம் தரையிலிருந்து மேலெழுவது, பிடிப்பில்லாத கயிற்றில் மேலே ஏறுவது என தனுஷ் செய்யும் பித்தலாட்ட பிழைப்பு அம்மா திடீரென இறந்துபோக முடிவுக்கு வருகிறது. அம்மாவும் இறந்துவிட தனுஷூக்கு துணை பசுவும், வட்டிக்கடைக்கார குண்டர்கள் மட்டுமே துணை. அம்மாவின் அஸ்தியை எடுத்துக்கொண்டு பிரான்ஸூக்கு செல்பவரின் கையில் போலி யூரோ நோட்டு மட்டுமே துணை. சிறுவயதில் பார்த்து மாத இதழில் பார்த்து வியந்த பர்னிச்சர் கடையிலுள்ள பொருட்களை பார்த்து வியப்பதில் தனுஷின் பகல்பொழுது போகிறது. அங்கு வரும் எரின் மொரியார்டியை பார்த்த செகண்ட் முதல் காதலில் விழுகிறார். இடையறாமல் பேசிப்பேசி தமிழ் மொழி தெரியாத எரினை வளைக்கிறார் தனுஷ். இறுதியாக விடைபெறும்போது அழுத்தமாக உதட்டில் கிஸ் கொடுக்க, எரின் திகைத்துப்போகிறார். சந்திக்க சொன்ன நாளில் தனுஷ் காத

நோர்வீஜியன் வுட்! - தோற்றுப்போகும் திரைப்பிம்பம்

படம்
நோர்வீஜியன் வுட்: காமமே காயகல்ப மருந்து! நாவல் ஹாருகி முரகாமி எழுதிய நோர்வீஜியன் வுட்டில் டோரு வாட்டனபி கிஸூகியுடன் டபுள் டேட்டிங் செல்லும்போதுகூட பரிதவிப்பிலேயே இருக்கிறான். காரணம், கிஸூகியின் பால்ய கால தோழியும் காதலியுமான நவோகோ தன்னை ஏதாவது கூறுவாளோ என்ற தடுமாற்றம் மூவரும் சேரும் கணம் தோறும் ஏற்படுகிறது. பின்னாளில் நவோகோவுடன் கிஸூகி பற்றி பேசாதவரையில் உறவு சிறப்பாகவே செல்கிறது. நவோகோ, மனதும் உடலும் ஒருங்கிணையாத பெண். இறந்த காலத்தை தோண்டினால் அவளது குடும்பவே மனச்சிதைவு கொண்டதாக உள்ளது. உதாரணம்: படிப்பில் வென்ற நவோகோவின் சகோதரி அறையில் தற்கொலை செய்துகொள்ளும் பகுதி. டோரு, பல்கலைக்கழகத்தில் படிப்பதோடு செலவுக்கு வார நாட்களில் பல்வேறு வேலைகளை செய்து சம்பாதித்தபடி இருக்கிறார். கல்லூரி வேலை நிறுத்தம், ஜப்பானின் சமகால பிரச்னைகள் என எதுவும் நாவலில் கிடையாது. ஒட்டநறுக்கிய அகவுணர்வுகளின் துல்லியம் கூடுவது இதனால்தான். நவோகோ, மிடோரி,  ஹாட்சுமி, ரெய்கோ ஆகியோருடனான உறவு இணக்கமும் அதேவிதத்தில் விலகலும் கொண்டிருக்கிறது. பீட்டில்ஸ் இசைப்பகுதி ஒலிக்கும்போது நவோகோவும் டோருவ

ட்ரைவ்(2011)- ரத்தம் தெறிக்கும் குற்றம்!

படம்
ட்ரைவ்(2011) 2005 ஆம் ஆண்டு ரிலீசான எழுத்தாளர் ஜேம்ஸ் சாலிஸ் புத்தகமான ட்ரைவ் நாவலை தழுவி உருவானது ட்ரைவ். கதை, காலையில் காரேஜில் மெக்கானிக்காகவும்  இரவில் கொள்ளைக்காரர்களை காப்பாற்றும் ட்ரைவராகவும் வாழும் ஒருவரின் கதை. சாதாரணமாக பார்த்தால் சலிப்பான வாழ்க்கைதான். ஆனால் நான் லீனியர் நாவலை திரைக்கதை எழுத்தாளர் ஹூசைன் அமினி மாற்றிய விதத்தில் படம் திரில் ஹைவேயில் சேசிங், ரத்தம் பீய்ச்சும் சண்டை, துப்பாக்கிச்சண்டை என கிடுகிடுக்க வைக்கிறது. ஹீரோவுக்கு (ரியான் கோஸ்லிங்குக்கு படத்தில் பெயர் கிடையாது) இந்த வாழ்க்கையில் புகார் ஏதும் கிடையாது. தன் அபார்ட்மெண்டில் சிறுவனோடு வாழ்ந்து வரும் ஐரீன் பழக்கமாகிறாள். அப்புறம் என்ன? குற்றவாளி கணவன் சிறையில் கிடக்க ரியானின் மென்மையான அணுகுமுறை ஐரீனை மயக்க அவளே ரியானின் கையை பற்றுகிறாள். இதற்கிடையில் சிறுவன் பெனாசியோவின் பிறந்தநாளின்போது சிறையிலிருந்து ரிலீசாகும ்ஐரீனின் கணவன் ஸ்டேண்டர்டு , ஏராளமான கடன்களோடு அதனை கட்டவேண்டிய நெருக்கடியோடு வெளியே வருகிறான். சிறையில் அல்பேனிய குற்றவாளி குக், கடன்தொகையை கட்ட அடகு கடை ஒன்றை கொள்ளையடிக்க வற

RX100 - காதலை வீழ்த்தும் துரோகத்தின் கவண்வில்!

படம்
RX100 காதல் பெருந்தீ அணையாது! கோதாவரி கிராமத்தில் வாழும் தியேட்டர் ஒனரின் மகன் சிவா. பெற்றோர்கள் இறந்துவிட டாடி எனும் ராம்கியை நம்பி வாழ்பவன் வெறுப்பையும் அன்பையும் வெளிக்காட்டுவதில் நெருப்பு போன்றவன். சிவாவின் பைக்கான யமஹா ஆர்எக்ஸ் 100  டூ ஸ்ட்ரோக் சீற்றம்தான் நாயகனின் குணம் கூட.  சிகரெட், மது என அய்யப்ப சாமிக்கு மாலை போட்டவர்களை விட பவ்யமாக திரிபவனை மாற்றுவது ராவ் ரமேஷின் மகளான நகரத்து பெண் இந்து. லீவுக்கு கிராமத்திற்கு வருபவள் முதல் காட்சியிலேயே சிவாவின் சிக்ஸ்பேக்(சினிமா மேஜிக்) உடம்பில் மட்டையாகிறாள். லவ் டேக் ஆஃப் ஆச்சா? மஞ்சள் கயிறை கட்டிவிடலாமா என யோசிக்கும் கிராமத்தான் சிவாவிடம் காரியம் நடக்க  காதல் நாடகமாடி செக்ஸை நிலம், நீரில் திகட்ட திகட்ட அனுபவிக்கிறாள். உற்சாகமாக சிவா எடுக்கும் செல்ஃபிக்களை கவனமாக அழித்து விடுகிறாள்.  ஆடு கசாப்பு கடைக்காரனை நம்புவதுபோல இந்துவின் அன்பை பச்சை மண்ணாக காதல் என நம்புவனுக்கு அவன் சாகும்வரை தான் ஒரு செக்ஸ் பொம்மை என தெரியாமல் போகிறது. தேவையான விஷயம் முடிந்ததும் அமெரிக்க மாப்பிள்ளை கல்யாணம் செய்து கொண்ட செட்டிலாகிறாள் இந