தனுஷின் அகதிப் பயணம்!
தாயின் கனவைத்தேடும் நாடோடி!
தாயிடம் தந்தை யார், நாம் வசதியானவர்கள் கிடையாதா? வெகுளியாக கேள்வி கேட்கும் சிறுவன் பின்னாளில் நிலைமை புரியும்போது நாடோடி மாயாஜாலக்காரனாக மும்பையில் போலீசுக்கு தப்பி ஓடிக்கொண்டிருக்கிறார்.
பெரிய லட்சியமெல்லாம் கிடையாது. டுபாக்கூர் ட்ரிக்ஸ் மூலம் தரையிலிருந்து மேலெழுவது, பிடிப்பில்லாத கயிற்றில் மேலே ஏறுவது என தனுஷ் செய்யும் பித்தலாட்ட பிழைப்பு அம்மா திடீரென இறந்துபோக முடிவுக்கு வருகிறது.

அம்மாவும் இறந்துவிட தனுஷூக்கு துணை பசுவும், வட்டிக்கடைக்கார குண்டர்கள் மட்டுமே துணை. அம்மாவின் அஸ்தியை எடுத்துக்கொண்டு பிரான்ஸூக்கு செல்பவரின் கையில் போலி யூரோ நோட்டு மட்டுமே துணை. சிறுவயதில் பார்த்து மாத இதழில் பார்த்து வியந்த பர்னிச்சர் கடையிலுள்ள பொருட்களை பார்த்து வியப்பதில் தனுஷின் பகல்பொழுது போகிறது. அங்கு வரும் எரின் மொரியார்டியை பார்த்த செகண்ட் முதல் காதலில் விழுகிறார்.
இடையறாமல் பேசிப்பேசி தமிழ் மொழி தெரியாத எரினை வளைக்கிறார் தனுஷ். இறுதியாக விடைபெறும்போது அழுத்தமாக உதட்டில் கிஸ் கொடுக்க, எரின் திகைத்துப்போகிறார்.
சந்திக்க சொன்ன நாளில் தனுஷ் காதலி எரினை சந்தித்தாரா என்பதுதான் கதை.
படத்தில் அனைத்துமே பெஸ்ட் என கூறிவிடமுடியாது. அத்தனையிலும் நம்மை காப்பாற்றுவது மகாநடிகன் தனுஷ் மட்டும்தான். அர்ஜென்டினா நடிகை பெரனிஸ் பெஜோ பிரமாதமாக நடித்து ஜாலியாக பாட்டிலும் ஆடியிருக்கிறார். அதுவும் இந்திப்பாட்டு என்பதுதான் நாட் ஓகே. இந்திப்பாட்டு மட்டும் அமித் திரிவேதி இசை.

வின்சென்ட் மத்தியாஸின் ஒளிப்பதிவு கண்ணில் ஒற்றிக்கொள்ளும் பேரழகு. மும்பை, பிரான்ஸ், ஆப்பிரிக்கா, ஸ்வீடன் என செல்லும் நாடுகளில் ஒளிப்பதிவு மின்னுகிறது.
படத்தை சர்வநிச்சயமாக தியேட்டரில் போய் பார்க்கவேண்டாம். ஏனெனில் பெரிய ஆர்வத்தை படம், சாதித்தே தீரவேண்டும் என்ற ஆர்வத்தை கொண்டிருப்பதில்லை. ஹோம் வீடியோவாக பாருங்கள். அதுவே போதுமான திருப்தியை தரும். கனடா இயக்குநர் கென்ஸ்காட் இயக்கியிருக்கிறார். தனுஷூக்காக தரவிறக்கி பார்க்கலாம்.
படத்தின் மூலக்கதை:
| Based on | The Extraordinary Journey of the Fakir Who Got Trapped in an Ikea Wardrobe by Romain Puertolas |
|---|
-கோமாளிமேடை டீம்
நன்றி: பப்ஜி பாலாஜி, அஷ்ரத்