புது சிபிஐ பாஸ் எப்படி?
புது சிபிஐ பாஸ் இவர்தான்!
சிபிஐயின் இயக்குநர் ஆலோக் வர்மா,
சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா இருவருக்கும் இடையே மோதல் வெடிக்க இடைக்கால தலைவராகியிருக்கிறார்
ஆர்எஸ்எஸ்சுக்கு நெருக்கமான ஐபிஎஸ் அதிகாரி எம். நாகேஸ்வர ராவ்.
இந்தியா பவுண்டேஷன் நிறுவனரும்,
பாஜக தலைவருமான ராம் மாதவுடன் நெருக்கமான நட்பை தொடரும் நாகேஸ்வர ராவ், இந்து கோவில்களை
மாநில ஆதிக்கத்திலிருந்து மீட்கும் போராளி. மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கு எதிரான தடை நடவடிக்கைகளை
ஆதரித்தவர் விவேகானந்தா இன்டர்நேஷனல் உள்ளிட்ட ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் நிகழ்வுகளில்
முக்கிய விருந்தினர்.
தெலங்கானாவின் வாராங்கலில் பிறந்தவர்
நாகேஸ்வர ராவ். ஹைதரபாத்தின் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் வேதியியல் பட்டம் பெற்று,
மெட்ராஸ் ஐஐடியில் ஆய்வு படிப்பில் இணைந்தார். ஐபிஎஸ்(1986) தேர்வாகி 2016 ஆம் ஆண்டு
சிபிஐயில் கூடுதல் இயக்குநராக பணிக்கு புரிந்தவர். ஒடிஷாவில் ரயில்வே போலீசில் கூடுதல்
தலைவராக பணிபுரிந்த நாகேஸ்வர ராவ், மாநிலத்தில் முதல்முறையாக டிஎன்ஏ ஆதாரங்களின் மூலம்
கொலை வழக்கை துப்பு துலக்கி புகழ்பெற்ற சாதனையாளர்.