காயம் குணமாக்கும் லென்ஸ்!
காயம் குணமாக்கும் லென்ஸ்!
கண்களிலுள்ள கார்னியா தாக்கப்பட்டால்
ஏற்படும் பிரச்னையைத் தீர்க்க மருத்துவர்கள் பேண்டேஜை பயன்படுத்துவார்கள். ஆஸ்திரேலியாவின்
குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த பேராசிரியர் டாமியன் ஹர்கின் கண்களின் காயங்களை குணமாக்கும்
லென்ஸ் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
லிம்பல் மெசென்சிமல் ஸ்ட்ரோமல்
திசுக்களை தானம் பெற்று லென்சில் பயன்படுத்தி லென்சை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
அம்னியாட்டிக் சவ்வுகளை விட இவை எளிதாக கண்களில் ஏற்படும் காயங்களை குணமாக்குகின்றன.
“எங்களது தெரபி கார்னியா அழற்சி கொண்டவர்களுக்கு பெரும் நிம்மதியைத் தரும். வெப்பம்,
வேதிப்பொருட்கள் உள்ளிட்டவற்றால் ஏற்படும் பாதிப்புகளை இம்முறையில் சரிசெய்யலாம்” என்கிறார்
டாமியன் ஹர்கின். தற்போது சோதனைகள் தொடங்கியுள்ளதால் சில ஆண்டுகளில் சந்தையில் லென்ஸ்கள்
விற்பனைக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.