கட்டற்ற அறிவு மின்னூல் வெளியீடு!
இனிய நண்பர்களுக்கு,
விண்டோஸ் தெரிந்தளவு அரசு கணினியில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள லினக்ஸ் ஓஎஸ் பற்றி நமக்கு தெரியாது. அதை தெரிந்துகொள்வது அறிவு சுதந்திரத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை விளக்கும் நூல்தான் இது.
கட்டற்ற அறிவு தொடருக்கான ஐடியாவை சொன்னதும் கட்டற்ற மென்பொருள் அமைப்பின் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அழைத்து இதற்கான பயன்பாடுகளை கூறிய கணியம்.காம் சீனிவாசன் அவர்களுக்கு என்றும் எனதன்பு.
பல்வேறு இ-நூல்களை அவர் கொடுத்ததோடு அடிப்படையான லினக்ஸ் குறித்து பேசி ஊக்கப்படுத்தினார். இது குறித்து பல்வேறு இணையதளங்கள் உதவின. நூலில் அடிப்படையாக லினக்ஸ் எதற்கு என்பது மட்டுமே பேசப்பட்டுள்ளது. லினக்ஸை எப்படி இன்ஸ்டால் செய்வது, அதில் குறிப்பிட்ட பணிகளை மேற்கொள்வது என்பது குறித்து கூறப்படவில்லை. லினக்ஸை நாம் தேர்ந்தெடுப்பது ஏன்? அதன் அவசியம் குறித்து இந்நூலை படிப்பவர்கள் அறிந்துகொள்வார்கள் என நம்புகின்றேன்.
இணைய லிங்க் இதோ!
https://tamil.pratilipi.com/story/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-KakLMGgXvaf0