கரடியோடு பாக்சிங்!




Image result for vennela kishore


பிட்ஸ்!



அதிவேக சாதனை!

சீனாவின் ஜியாமென் நகரைச் சேர்ந்த இளைஞர் க்யூ ஜியான்யூ, மூன்று ரூபிக் க்யூப்களை ஒன்றுசேர்ந்து(1 நிமிடம் 39 நொடிகள்) கின்னஸ் சாதனை செய்திருக்கிறார். “பல லட்சம் முறை பிராக்டிஸ் செய்து சில பார்முலாக்களின் மூலம் மூன்று ரூபிக் க்யூப்களை ஒன்றிணைத்துள்ளேன்” என்கிறார் சாதனை இளைஞர் ஜியான்யூ.

பட்ஜெட் வண்டி!

இந்தோனேஷியாவைச் சேர்ந்த குடும்பஸ்தர், இருவர் அமர்ந்து செல்லும் மோட்டார் சைக்கிளை அவரின் குடும்பமே(4பேர்) அமரும்படி மாற்றி வியக்க வைத்திருக்கிறார். “மழை, வெயில் தூசு, தும்பு பிரச்னை இனி இல்லை” என கூறுபவர், பைக்கை ரிக்‌ஷா போல மாற்றி குடும்பத்தினரை ஏற்றி ஜாலி சவாரி செய்து வருகிறார்.

கரடிக்கு குத்து!

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவைச் சேர்ந்த சோனி பம்ரேவின் வீட்டுக்கு பெண்கரடி தன் இருகுட்டிகளுடன் வந்தது. ஷாக்காகி மிரண்ட சோனியை பார்த்து இரண்டு குட்டிகள் ஓடினாலும், பெண்கரடி சண்டையிட்டு கடிக்க முயன்றது. கரடியின் மூக்கிலேயே குத்திய தாத்தா சோனியின் நாக்அவுட் பன்ச்சுகளை தாங்கமுடியாத பெண்கரடி பின்வாங்கி ஒடிவிட்டது. மருத்துவமனையில் காயங்களுக்கு ஆயின்மென்ட் தடவிவருகிறார் தாத்தா சோனி பம்ரே.

ரயிலில் பார்ட்டி!

அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள சப்வே ரயிலில் ஆம்பர் ஆஸ்லே என்ற புகைப்படக்காரர் தன் பிறந்தநாள் பார்ட்டியை நண்பர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தார். அவரின் சகோதரரின் ஐடியாபடி மன்ஹாட்டன்- ப்ரூக்ளின் செல்லும் ரயிலில் இறால் உணவுகளுடன் கொண்டாடப்பட்ட பர்த்டே நிகழ்வின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.