பேஸ்பால் பிட்சர்! - சாதித்த ஆப்பிரிக்க அமெரிக்க பெண்!








Image result for mone davis



சக்தி!

மோனே டேவிஸ்

அமெரிக்காவின் பென்சில்வேனியாவிலுள்ள பிலடெல்பியாவில் பிறந்த மோனே டேவிஸ், 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பேஸ்பால் லீக் போட்டிகளில் பங்கேற்று ஷட்டர் விருது பெற்ற முதல் ஆப்பிரிக்க –- அமெரிக்கர்.
எதிரணியை ரன் அடிக்காமல் ஒற்றையாளாக தடுக்கும் பிட்சர் புயல் மோனே டேவிஸ். பதிமூன்று வயதில் 101 கி.மீ வேகத்தில் பந்து எறிந்தால் மேடம் 110 கி.மீ வேகத்தில் ராஜதானியாக மாறுவார். 2014 நடைபெற்ற வேர்ல்ட் லீக்கில் பங்கேற்ற இரு சிறுமிகளில் மோனே டேவிசும் ஒருவர். அதேசமயம் லீக்கில் பங்கேற்ற பெண்களில் ஆறாவது நபரும் கூடத்தான். “முதன்முதலில் எட்டு வயதில் பேஸ்பால் அறிமுகமானது. பின் பயிற்சிபெற்று முதன்முதலில் மைதானத்தில் நுழையும்போது எதிரணி மட்டுமல்ல எங்கள் அணியைச் சேர்ந்தவர்களும் என்னை பார்த்து ஜோக்கடித்தனர். நான் முதல் பந்தை வீசியதும் சிரிப்புகள் மெல்ல அடங்கதொடங்கின” என்கிறார் மோனே டேவிஸ். இவரின் கைகள் பிற வீரரை விட 15% குட்டையாக இருப்பதால் 110 கி.மீ வேகத்தில் வீசி எதிரணியை திகைக்க வைத்து ஷட்டர் விருது வென்றிருக்கிறார். போராடவேண்டியது மைதானத்தில் மட்டுமல்ல என்பதை மோனே டேவிஸ் முன்பே உணர்ந்தது அவரின் வெற்றி ரகசியம்.