R&AW 50!





Related image



நேர்காணல்!


“ரா அமைப்புக்கு புத்துயிரூட்ட இளைஞர்களால் மட்டுமே முடியும்”


-ஆலோக் ஜோஸி, முன்னாள் தலைவர்(NTROR&AW)

தமிழில்: ச.அன்பரசு

1976 ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச்சைச் சேர்ந்த ஆலோக் ஜோஸி, இவ்வாண்டு செப்.18, NTRO அமைப்பின் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். ரா அமைப்பில்(2012-14) இயக்குநராக இருந்தவர்.



Related image




உளவு அமைப்புகளுக்கு இன்றைய காலத்திலுள்ள சவால்கள் என்ன?
சீனாவும், பாகிஸ்தானும் நம்மைப் பற்றிய தகவல்களை இணையம்,சூழ்ச்சி மூலம் பெறமுயற்சித்து வருகின்றன. ராவிலுள்ள ஐபி அதிகாரிகள் இதனை சமாளிக்கும் பணியில் உள்ளனர். சைபர் தாக்குதல்களை சமாளிக்கும் முறையில் நாம் இன்னும் முன்னேறவேண்டிய தேவையுள்ளது.

ரா அமைப்பின் முன்னாள் தலைவராக இருந்தவகையில் எதிர்கொண்ட பிரச்னைகள் என்ன?

இந்தியாவை உருக்குலைக்க முயற்சிக்கும் ஐஎஸ் அமைப்பு போன்ற ஏராளமான தீவிரவாத அமைப்புகளிடமிருந்து மிரட்டல்களை சந்தித்திருக்கிறோம். நேரடியாக, இணையவழி என எந்தவழியிலும் இந்தியாவை அச்சுறுத்த முனைபவர்களை தடுக்க ரா நேரடியாக மறைமுகமாக போரிட்டுக்கொண்டே இருக்கிறது.

தேசியதொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பின்(NTRO) புதிய கண்டுபிடிப்புகள் என்ன?

எங்களது அமைப்பு செயற்கை நுண்ணறிவிற்கான மையத்தை உருவாக்கியுள்ளது. இணையம், தகவல்தொடர்பு ஆகியவற்றில் இந்த மையம் முக்கியமான பங்கை வகிக்கும். நிறுவன மேம்பாட்டிற்கான பல்வேறு கருவிகளை வாங்கியதை அவசியமில்லை சிலர் குற்றம்சாட்டினர். ஆனால் அதில் உண்மை இல்லாததால் இவற்றை நாங்கள் கண்டுகொள்ளவில்லை.

ரா அமைப்பில் உங்களது பதவிக்காலத்தில் என்ன பிரச்னைகளை சமாளித்து மீண்டுள்ளீர்கள்?

ஃபேஸ்புக்கில் போலி ஐடிகள் மூலமாக அதிகாரிகளை மடக்கி, தகவல்களை கறக்க முயன்ற முயற்சியை முறியடித்தோம். ஐடியின் முகவரி பாகிஸ்தானிலும் பிற வெளிநாடுகளிலும் இருப்பதை கண்டுபிடித்து சூழ்ச்சியை கருவறுத்தோம். பாக்.கின் ஐஎஸ்ஐ உளவியலாளர்கள் மூலம் சமூகவலைதளங்களை அணுகி தங்களுக்கான உளவு ஆட்களை தேர்ந்தெடுக்கிறார்கள்.

50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ரா அமைப்பை வலுப்படுத்த உங்களது ஆலோசனைகள்..?

இணையம், ரகசியசெய்திகள், மொழி உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்த முறையில் பணிசெய்வதற்கான இளைஞர்களை ராவில் இணைக்கலாம். வெளிநாடுகளில் உளவு அமைப்புகளில் உள்ள இளைஞர்களை போல இந்தியாவையும் புதுப்பிப்பது அவசியம்.

நன்றி: நம்ரதா பிஜி அகுஜா, தி வீக்.
   


பிரபலமான இடுகைகள்