கால் பிராக்சர் ஆயிடுச்சா?
ஃபிராக்சர் -– பிரேக் என்ன வித்தியாசம்?
இரண்டிற்கும் ஒரே அர்த்தம்தான்.
எலும்பு முறிவு என்பது ஃபிராக்சரை விட ஆபத்தானது என சிலரும், எலும்பு முறிவில் குறிப்பிட்ட
வகைதான் ஃபிராக்சர் என பலரும் பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால் இரண்டுமே சொல்லும்
அர்த்தம், எலும்பு உடைஞ்சு போச்சு என்பதுதான்.
“சீரான எலும்பு இயங்கமுடியாமல்
உடைந்து போய்விட்டது என்பதுதான் இரண்டு சொற்களுக்குமான அர்த்தம்” என்கிறார் அமெரிக்க
எலும்பியல் மருத்துவரான நோயல் ஹென்லே.
உடலின் ஓரிடத்தில் வலி தொடர்ச்சியாக
எழுந்தால் அதனை மருத்துவரிடம் காட்டி சிகிச்சை பெறுவது அவசியம். குறிப்பாக பாடிபில்டிங்
போன்ற அதிக எடைகளை தூக்கும் பயிற்சிகளில் தசைச்சவ்வுகள் கிழிவதும், எலும்புகள் உடைவதும்
சகஜம். எலும்பு உடைந்த இடம் வலிப்பதோடு கை வீங்கத்தொடங்குவதை சிகிச்சை எடுக்கவேண்டியதன்
முக்கிய அறிகுறி.