பெண்களின் சாய்ஸ் கல்வி!
எங்கள் சாய்ஸ் கல்வி!
பத்தில் ஏழு டீனேஜ் பெண்கள் பட்டம்
பெறுவது லட்சியம் எனவும், நான்கில் மூன்றுபேர் குறிப்பிட்ட தொழில் துறையையும் குறிப்பிட்டுள்ளனர்.
இருபத்தொரு வயதுக்கு முன்னர் திருமணம்
செய்வதையும் இளம்பெண்கள் விரும்புவதில்லை என நாந்தி பவுண்டேஷன் செய்த ஆய்வறிக்கை தகவல்
தெரிவித்துள்ளது. 28 மாநிலங்கள், ஏழு முக்கிய நகரங்களில் என 74 ஆயிரம் டீனேஜ் பெண்களிடம்
நாந்தி பவுண்டேஷன் நடத்திய ஆய்வு இது. இதில்
25 சதவிகித பெண்கள் முதுகலை பட்டதாரியாகவேண்டுமென்றும், 12 சதவிகிதம் பேர் தொழில்ரீதியான
பட்டம் தேவையென்றும் ஆய்வில் கூறியுள்ளனர்.
ஆய்வுக்கு 13-19 வயதான டீனேஜ்
பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒன்பது தலைப்பிலான கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் கல்வி,
உடல்நலம், அடிப்படை வாழ்க்கைத்தரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட கேள்விகளுக்கு
டீனேஜ் பெண்கள் விடையளித்துள்ளனர்.