காப்பீட்டை விளக்கும் ஏஐ நுட்பம்!
மருத்துவ காப்பீட்டிற்கு AI!
மருத்துவ காப்பீட்டிற்கு ஏஜெண்ட்
ஒப்புவிக்கும் பொய்களை கேட்பதற்கு ஏஐ கேட்கும் சிம்பிள் நேரடியான பதில்கள் சூப்பர்தானே?
அமண்டா லானெர்டின் அலெக்ஸ் எனும் ஏஐ பாட் அப்படி உருவானதுதான்.
ஜெல்லிவிஷன் நிறுவனத்தின் இயக்குநரான
அமண்டாவின் அலெக்ஸ் எனும் ஏஐ ஐடியா, பெருமளவு மக்களுக்கு மருத்துவதிட்டங்களை எளிமையானவையாக்கின.
1990 ஆம் ஆண்டு யூ டோன்ட் நோ ஜாக், ஹூ வான்ட் டு பி மில்லியனர் எனும் கல்வி பிளஸ் பொழுதுபோக்கு
என விளையாட்டுகளை வெளியிட்ட நிறுவனம் இது. மைக்ரோசாஃப்ட், சோனி ஆகிய நிறுவனங்களை சமாளிக்க
முடியாது ஜெல்லிவிஷன் தவித்தது. அலெக்ஸ் எனும் ஜெல்லிவிஷன் நிறுவனத்தின் ஏஐ ஐடியாவை
இன்று ஆயிரம் நிறுவனங்கள் பின்பற்றுகின்றன. மதிப்பு 110 மில்லியன்.
வர்ஜீனியாவின் சார்லட்ஸ்வில்லேவில்
பிறந்த அமண்டா,”டாக்டராக முயற்சித்தேன். ஆனால் கைகூடவில்லை, உடனே விளம்பரத்துறையில்
வேலைக்கு சேர்ந்துவிட்டேன்” என்பவர் ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் ஜெல்லிவிஷனில் இணைந்து
இயக்குநராகியுள்ளார். 2017 ஆம் ஆண்டு சிகாகோவின் சிறந்த நாகரிகமான கம்பெனி என விருது
பெற்றது. சவால்கள் காத்திருக்கின்றன, அமண்டா அதையும் வெல்வார்.