காப்பி செய்திகள்!



இச்செய்திகள் இணையதளங்களிலிருந்து பெறப்பட்டு தொகுக்கப்பட்டது. 
Image result for ducati logo




எகிறும் எதிர்பார்ப்பு - டுகாட்டி நிறைவேற்றுமா?

டுகாட்டி ஸ்க்ராம்ளர் அறிமுகம் செய்யப்பட்டு 3 ஆண்டுகள் கடந்து விட்டன. தற்போது அந்த மாடலை அப்டேட் செய்து புதிய பைக்கை ரிலீஸ் ஆகவுள்ளது. டுகாட்டி மாடலில் ஸ்க்ராம்ளர் ரகம்தான் பைக் பிரியர்களுக்கு கொள்ளை இஷ்டமான மாடல். புதிய பைக்கில் செய்யப்பட்ட மாற்றங்களை ஜாலியாக அலசுவோமா?
எல்.இ.டி. லைட்டுகள்
புதிய டுகாட்டி ஸ்க்ராம்ளர் 2019 பைக்கின் முகப்பில் எல்.இ.டி. விளக்குகளும், எல்.இ.டி. இண்டிகேட்டர்களும் பொருத்தப்பட்டுள்ளன. இது ஆட்டோமேட்டிக் வகையை சேர்ந்தது. புதிய ஸ்க்ராம்ளரில் உள்ள லைட்டுகள் அனைத்தும் எல்.இ.டி.யில் பிரமிப்பு அன்மிலிடெட்.
மனம் வயக்கும் வண்ணம்!
2 வண்ணங்களில் புதிய பைக் வெளியாகவுள்ளது. 
லான்ச் செய்யப்பட்டதில் இருந்து டுகாட்டி பைக் 55 ஆயிரம் யூனிட்டுகள் விற்பனையாகி உள்ளது. அந்த வகையில் வெளிப்புற தோற்றத்திற்கு டுகாட்டி நிறுவனம் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. எஞ்சினில் அலுமினியம் ஃபினிஷிங், புதிய மஃப்ளர் கவர்,டேங்க் பேனல், 10 ஸ்போக் அலாய் வீல் ஆகியவற்றுடன் மஞ்சள் ஆரஞ்ச் என 2 வண்ணங்களில் வெளியாகவுள்ளது.
 

எலக்ட்ரானிக் அப்டேட்ஸ்

கார்னரிங் ஏ.பி.எஸ். டுகாட்டி 2019-ல் பொருத்தப்பட்டுள்ளது
டுயல் சேனல் கார்னரிங் ஏ.பி.டி. இதில் பொருத்தப்பட்டுள்ளது. திடீரென ஏற்படுத்தப்படும் நெருக்கடியை  பிரேக் எதிர்கொள்ளும் வகையில் புதிய கருவிகள் உள்ளது.

புத்தம் புதியவை!

டுகாட்டி 2019-ல் புதிய ரக சீட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. உயரம் 798 மி.மீ. அளவுக்கு குறைக்கப்பட்டதுடன் நல்ல அகலம் ஆசுவாசம் தருகிறது. ஃப்ளாட்டர் ஹேண்டில் பார்கள் கச்சிதமான பிடிப்பை கைகளுக்கு அளிக்கிறது.

புதிய எல்.சி.டி. திரை சிஸ்டம் டுகாட்டி 2019-ல் பொருத்தப்பட்டுள்ளது. ஹைட்ராலிக் க்ளட்ச் கன்ட்ரோல், புதுப்பிக்கப்பட்ட சஸ்பென்ஷன் செட்-அப்புடன், சற்று உயர்த்தப்பட்ட கிரவுன்ட் கிளியரன்ஸ் ஆகியவை வாடிக்கையாளர்களுக்கு சாகச அனுபவத்தை நிச்சயம் தரும். 

டுகாட்டி 2019 ஸ்க்ராம்ளர் பைக் இந்தாண்டு இறுதியில் அல்லது அடுத்தாண்டு தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொகுப்பு: காந்திசாமி


2


விர்..விர் செய்திகள்!


ஃபோக்ஸ்வேகன் கார் நிறுவனம் சீனாவின் சாய்க் மோட்டர் நிறுவனத்துடன் இணைந்து புதிய கார் தொழிற்சாலையை ஷாங்காயில் அமைக்கவுள்ளது. ரூ.18 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் இந்த கார் தொழிற்சாலையில், ஃபோக்ஸ்வேகனின் ஆடம்பர கார் பிராண்டான ஆடி கார்கள் தயாரிக்கப்படவுள்ளன.

ஸ்கோடா நிறுவனம் தனது புதிய சூப்பர் ஸ்போர்ட்ஸ் லைன் காரை தற்போது லான்ச் செய்துள்ளது. பெட்ரோல் காரின் விலை ரூ. 28.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டீசல் எஞ்சின் கார்களின் விலை விலை ரூ. 31.49 லட்சம்.
முழுக்க முழுக்க மின்சாரத்தால் இயங்கும் SUV காரை வரும் 2020-க்குள் இந்தியாவில் லான்ச் செய்வோம் என்று சீனாவைச் சேர்ந்த எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் தாய் நிறுவனம் சாய்க் மோட்டார்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் GNCAP எனப்படும் Global New Car Assessment Program- ன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் மாருதி சுசுகி ஸ்விஃப்ட் காருக்கு விபத்துக்கான சோதனை பிரிவில் 5-க்கு 2 ஸ்டார்கள் மட்டுமே கிடைத்துள்ளன. வயது வந்தோருக்கான பாதுகாப்பு விஷயங்களில் ஸ்விஃப்ட் காரில் குறைபாடு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

ஆட்டோ மொபைல்ஸ் துறையிலும்,#MeToo விவகாரம் பூதமாக கிளம்பியுள்ளது.  இதில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தகவல் தொடர்பு தலைமை அதிகாரி சுரேஷ் ரங்க ராஜன் சிக்கியுள்ளார். இணையத்தில் அலையடிக்கும் புகார்கள் அடங்கிய ஸ்க்ரீன் ஷாட்டுகள் வைரலாகிவருகின்றன.
முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான போர்ஷ், டீசல் வாகனங்களை தயாரிப்பதை நிறுத்திக் கொள்வதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டீசல் கார்களின் விற்பனையில் போர்ஷ் நிறுவனம் பின்தங்கியதால் இம்முடிவை நிறுவனம் எடுத்துள்ளதாக மோட்டார்துறை வட்டாரங்கள் தகவல் கூறியுள்ளன.

மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனம் அப்டேட் செய்யப்பட்ட KUV100 மற்றும் TUV300 கார்களை சந்தைப்படுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது.
முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் வகையிலான KUV100 காரை 2019-ல் அறிமுகம் செய்கிறது மஹிந்திரா. இதே மாடலில் டீசலில் இயங்கும் காரும் உருவாக்கப்பட்டுள்ளது.

3

பைக் வாங்க போறீங்களா? –- இதைப் படிங்க முதலில்!

டெலிவரி நாட்களுக்கு முன்பே முன்பே டீலருக்கு போன் செய்து பைக் டெலிவரியை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.உங்கள் வீட்டில் நல்ல நாள் கெட்ட நாள், அஷ்டமி நவமி பார்ப்பதாக இருந்தால் அதைப்பொறுத்து தேதியை முன்னரோ பின்னரோ மாற்றிவிட்டு டீலருக்கு தெரிவித்து விடுங்கள்

டெலிவரியின்போது மறக்காமல் உங்களுடன் வாகனங்களைப் பற்றி அனுபவம் உள்ளவரை அழைத்து செல்லுங்கள். நீங்கள் வாங்கவிருக்கும் வாகனத்தை அவரிடம் காட்டி எல்லாம் சரியாக உள்ளதா என்று பரிசோதித்து பார்க்க சொல்லவும்.

உங்கள் வாகனத்தை டெலிவரி எடுக்கும் போது பகலில் செல்வது உத்தமம். வாகனத்தின் நிறம் மற்றும் மற்ற பாகங்கள் சரியாக உள்ளதா என பார்க்க உதவும். மேலும் ஒலிபெருக்கி, பகல் விளக்குகள், முகப்பு விளக்குகள், இன்டிகேட்டர், பேட்டரி போன்றவற்றை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

முன்பணம் செலுத்தியிருந்தால் அந்த ரசீது மற்றும் மீதித் தொகையைச் சரிபார்த்து எடுத்துச் செல்லுங்கள். வாகன கடன் பெற்று இருந்தால் அனைத்து பேப்பர்களையும் சரி பார்த்து கை எழுத்து போடுங்கள். லோன் நம்பர், இன்சூரன்ஸ், ரெஜிஸ்ட்ரேசன் என அனைத்தையும் சரிபார்த்து கொள்ளுங்கள்.
வாகனத்தை எடுத்தவுடன் எத்தனை கிமீ ஓடி இருக்கிறது என்பதை கவனியுங்கள். 5-10 கிமீ என்றால் ஓகே. ஆனால் அதற்கு மேற்படி இருந்தால் காரணத்தை கேட்டு தெளிவு படுத்திக்கொள்ளுங்கள்.

பைக்கை ஸ்டார்ட் செய்து ஒரு நிமிடம் பாருங்கள், ஏதேனும் அப்நார்மல் புகை வருகிறதா என்பதை கவனிக்கவும், இப்போது உங்கள் வண்டியை ஓட்டிப் பாருங்கள். மிதமான மற்றும் சற்று கூடுதல் வேகத்தில் ஒட்டும் போது ஏதேனும் தேவையில்லாத அதிர்வுகள் மற்றும் சத்தம் வருகிறதா? என்று செக் செய்வது அவசியம்.

கடைசியாக, எக்ஸ்ட்ரா பிட்டிங், க்ரேஸ் கார்டு, ஆலாய், பூட் ரெஸ்ட் போன்றவற்றை ஒருமுறை சரிபார்த்துக் பிறகே டெலிவரி எடுங்கள்.


4

ஜாகுவார் எஃப் பேஸ் –- பெட்ரோல் மாடல்

ஜாகுவார் எஃப் பேஸ் எஸ்யூவி டீசல் மாடலில் மட்டுமே விற்பனையாகி வந்தது. இறக்குமதியாகி  விற்பனையான ஜாகுவார் கடந்த ஆண்டு முதல் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது இந்தியாவில் ஜாகுவார் எஃப் பேஸ் எஸ்யூவியின் பெட்ரோல் மாடலும் மார்க்கெட்டுக்கு வந்துள்ளது. பெட்ரோல் மாடலானது பிரஸ்டீஜ் என்ற ஒரே ஒரு வேரியண்ட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. புதிய ஜாகுவார் எஃப் பேஸ் எஸ்யூவியில் பொருத்தப்பட்டுள்ள 2.0 லிட்டர் இன்ஜெனியம் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 247 பிஎச்பி பவரையும், 365 என்எம் டார்க் திறனையும் அள்ளித்தருகிறது.

8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் சக்தி 4 சக்கரங்களுக்கும் செலுத்தப்பட கார், மணிக்கு 217 கிமீ வேகத்தில் பறக்கிறது. இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 7 வினாடிகளில் தொட்டுவிடும். புதிய ஜாகுவார் எஃப் பேஸ் எஸ்யூவியில் அடாப்டிவ் எல்இடி ஹெட்லைட்டுகள், 10.2 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், லேன் கீப் அசிஸ்ட், 360 டிகிரி பார்க்கிங் சென்சார்கள், ஓட்டுனருக்கு தூக்க எச்சரிக்கை, வைஃபை ஹாட்ஸ்பாட் வசதி, பார்க் அசிஸ்ட் உள்ளிட்ட ஏராளமான டெக் வசதிகளுண்டு.  
க்ரோம் சுவிட்சுகள், மெட்டல் பெடல்கள், 10 விதமான பொசிஷன்களில் இருக்கைகள் உள்ளிட்ட ஆக்சஸெரீகளும் உள்ளன. 

விசேஷ அலாய் வீல்கள், பிரேக் சிஸ்டம் ஆகியவையும் ஜாகுவாருக்கு சிறப்பு. கடந்த ஆண்டு இறுதியில் ஜாகுவார் எஃப் பேஸ் எஸ்யூவியின் டீசல் மாடலின் பிரஸ்டீஜ் வேரியண்ட் விலை. ரூ.60.02. புதிய பெட்ரோல் மாடல் ரூ.63.15 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. பிஎம்டபிள்யூ ேஎக்ஸ் - 3, மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ மற்றும் வால்வோ எக்ஸ்சி60 ஆகிய சொகுசு ரக எஸ்யூவி கார்களுக்கு இக்கார் சவால் என்பதில் சந்தேகமில்லை.



5

மேக் இன் இந்தியா ரயில்!

அண்மையில் சென்னை, பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் செமி புல்லட் ரயில் அறிமுகமானது.

மேட் இன் சென்னை 'டிரெயின் - 18' என்ற பெயரில் அழைக்கப்பபடும் இந்த புதிய அதிவேக ரயில், பிரதமர் மோடியின் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் வெறும் 18 மாதங்களில் உருவாக்கப்பட்டுள்ளது.

85% உள்நாட்டு உதிரிபாகங்கள் கம்பீரமாக நீலவண்ணக் கலவையில் புல்லட் ரயிலின் ஸ்டைலில் மின்னுகிறது. வெளிப்புறத்தில் மின்னணு தகவல் பலகை மூலமாக ரயில் விபரத்தை பயணிகள் தெரிந்து கொள்ள முடியும். புல்லட்
தனி எஞ்சின் இல்லாமல், பதினாறு ரயில் பெட்டிகளிலும் மின் மோட்டார் பொருத்தப்பட்டு ரயில் இயங்குகிறது. ஓட்டுனர் அறையிலிருந்து கடைசி பெட்டி வரை தடை இல்லாமல் நடந்து செல்ல முடியும். மேலும், ஓட்டுனர் அறை உள்ள பெட்டியிலும் பயணிகளுக்கான இருக்கைகள் உண்டு.
சென்னையில் ஓடும் மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் போன்று, இந்த ரயிலின் இருபுறத்திலும் ஓட்டுனர்களுக்கான கேபின் அமைக்கப்பட்டுள்ளது. அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த ரயிலை எளிதாகவும், பாதுகாப்பாகவும் இயக்குவதற்கு ஏதுவாக கம்ப்யூட்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தானியங்கி கதவுகள் பெட்டிகளுக்கு நடுவில் கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. அனைத்து கதவுகளும் மெட்ரோ ரயில் போலவே, தானியங்கி முறையில் செயல்படும். கதவுகளில் சென்சார் இருப்பதால், பயணிகள் அவசரத்தில் ஏறும்போது, ஆட்டோமேடிக்காக கதவுகள் திறந்து மூடுகின்றன. தானியங்கி படிக்கட்டுகள் ரயில் கிளம்பியதும் தானாக உள்சென்றுவிடுகின்றன. படிக்கட்டுகளில் ஏறும்போது பொருட்களை பயணிகள் தவறவிட்டால், அது கீழே விழாதபடி தடுப்பு வசதிகளும் உண்டு. இருக்கை வசதிகள் எக்ஸ்கியூட்டிவ் எனப்படும் உயர் வகுப்பு இருக்கைகள் கொண்ட இரண்டு பெட்டிகளும், இரண்டாம் வகுப்பு இருக்கைகள் கொண்ட 14 பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

 எக்ஸ்கியூட்டிவ் பெட்டிகளில் இருக்கைகளை 180 டிகிரி கோணத்தில் திருப்பலாம்.
ரயில் செல்லும் திசையில் முன்னோக்கி பயணிகள் அமர்வதோடு எக்ஸ்கியூட்டிவ் பெட்டிகளில் இதனை பட்டன் மூலமாக இயக்கலாம். இந்த ரயிலில் பெட்டிகளை சாய்ப்பதற்கு முன்னோக்கி தள்ளி சாய்த்துக் கொள்ளலாம். மாற்றுத் திறனாளிகள் சக்கர நாற்காலிகளுடன் ரயிலில் பயணிப்பதற்கு ஏதுவாக, ஓட்டுனர் அறைக்கு அருகில் வழியும், இடமும் உண்டு.
இந்த ரயிலின் ஒவ்வொரு பெட்டியிலும் சிறிய உணவு ஸ்டால் இருக்கும். ஜிபிஎஸ் அடிப்படையில் ரயில் நிலையங்கள் குறித்த அறிவிப்புகள், சிசிடிவி கேமரா ஆம்பியன்ட் லைட் சிஸ்டம் இந்த ரயிலில் கொடுக்கப்பட இருக்கிறது. ரயில் பாய்ச்சலாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் மிக குறைவு.

ரயிலில் மிகப் பெரிய ஜன்னல் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், மிக விசாலமான பார்வையை பயணிகளுக்கு வழங்கும். வெளிச்சத்தை தடுப்பதற்கு வசதியாக, ஜன்னல்களில் ஷன் ஷேட் வசதியும் இருக்கிறது. சிறப்பான கட்டமைப்பு டிரெயின் - 18 ரயில் பெட்டிகளில் பெரும்பாலான கருவிகள், சாதனங்கள் அனைத்தும் ரயில் பெட்டியின் தரை தளத்திற்கு கீழாக கொடுக்கப்பட்டுள்ளதால் அதிக இடவசதியை உணர முடியும். பொழுதுபோக்கு வசதிகள் இந்த ரயிலில் இருக்கைகள் மிக சொகுசாகவும், தீப்பிடிக்காத தன்மையும் கொண்டது. வைஃபை இன்டர்நெட் வசதியை தங்களது மொபைல்போன், லேப்டாப் கம்ப்யூட்டருடன் பயணத்தை இனிதாக்கலாம். பயோ டாய்லெட் பொருத்தப்பட்டு இருப்பதுடன், தானியங்கி தண்ணீர் குழாய்கள் இருப்பதால் சுகாதாரமான அனுபவத்தை இந்த ரயிலின் கழிவறைகள் வழங்கும். மேலும், உயர்தரமான தண்ணீர் குழாய்கள் மற்றும் பாகங்களுடன் கழிவறை வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

தனி எஞ்சின் பொருத்தப்பட்ட ரயில்களைவிட பயண நேரம் 15 சதவீதம் வரை குறையும். இந்த ரயில் மணிக்கு 160 கிமீ வேகம் வரை இயக்க முடியும் அதிக மின் சிக்கனம், சுற்றுச்சூழலுக்கு உகந்தது. இந்த ரயிலில் பிரேக் ஆற்றலை பேட்டரியில் சேமிக்கும் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டமும் உள்ளது.
சதாப்தி ரயிலுக்கு மாற்றாக புதிய டிரெயின் - 18 ரயில் சேவைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. டெல்லி - போபால் இடையிலான சதாப்தி ரயிலாக புத்தாண்டு முதல் சேவைக்கு வரவிருக்கிறது.

பயணிகள் சேவைக்கு வரும்போது, இந்தியாவின் அதிவேக ரயில் என்ற பெருமையை பெறும். வெறும் 18 மாதங்களில் இந்த ரயிலை சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலை உருவாக்கி அசத்தி இருக்கிறது. இந்த ரயில் ரூ.100 கோடி மதிப்பில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 2018 - 19ம் நிதி ஆண்டில் அடுத்து ஒரு டிரெயின் 18 ரயிலும், 2019 - 20ம் நிதி ஆண்டில் 4 டிரெயின் 18 ரயில்களும் தயாரிக்கப்பட இருக்கின்றன.

தொகுப்பு: திருமால்முத்து


நன்றி: மோட்டார் டுடே

பிரபலமான இடுகைகள்