நித்தம் வேண்டும் ரத்தம்!
நித்தம் வேண்டும் ரத்தம்!
அலெக்ஸாண்டர் பிச்சுஸ்கின்(1974-)
பள்ளியில் நடந்த அவமானங்களால்
துவண்ட ரஷ்யாவின் பிச்சுஸ்கின், தாத்தாவின் தூண்டுதலால் செஸ்சில் வித்தகரானார். தாத்தா
இறந்துபோக,ஆவேசமானவர் இலவச வோட்கா காட்டி 48 நபர்களை கொன்றார். பின்னாலிருந்து ஒருவரின்
மண்டையை சுத்தியலால் உடைத்து திறந்து துளையில் வோட்காவை ஊற்றி கொல்வது பிச்சுஸ்கினின்
சிக்னேச்சர் ஸ்டைல்.
அனடோலி ஓனோபிரைன்கோ(1953-2013)
உக்ரைன் விலங்கு என்றழைக்கப்பட்ட
அனடோலி, தாய் இறந்தவுடன் தந்தை ஏற்காததால் காப்பகத்திற்கு அனுப்பபட்டவர். பெண்களை கற்பழித்து,
குழந்தைகளை சித்திரவதை செய்து கொல்பவர் குடும்பமாக தீர்த்துக்கட்டி வீட்டுக்கு தீவைத்து
ஆதாரங்களை அழித்துவிடுவார். 52 பேர்களை கொன்ற வனவியல் பட்டதாரி, சிறையில் மாரடைப்பால்
இறந்தார்.
ஹெரால்டு சிப்மன்(1946-2004)
இங்கிலாந்தில் 250 நபர்களை கொன்ற
டாக்டர் டெத் என பெயரிடப்பட்ட ஹெரால்டு, டயாமார்பினை பயன்படுத்தி 80% வயதான பெண்களுக்கு
பரலோக சீசன் டிக்கெட் வழங்கினார். பதினைந்து கொலைகளுக்கு கோர்ட் ஆயுள்தண்டனை தர தூக்குபோட்டு
உயிரிழந்தார்.