குட்டி ஹிட்லருக்கு கண்டனம்!
பிட்ஸ்!

பூசணி படகு!
ஹாலோவீன் திருவிழாவை முன்னிட்டு
இங்கிலாந்தில் 619 கி.கி பூசணியில் படகை தயாரித்து அதில் டாம் பியர்சி என்பவர் துடுப்பு
போட்டு ஸ்கெல்டர்கேட் பாலத்தை கடந்தது உலக சாதனையாகியுள்ளது. விரைவில் மக்கள் பார்வைக்கு
பிரமாண்ட பூசணி படகு வைக்கப்படவிருக்கிறது.
பைக் படகு!
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஷேன்
ஸ்வான்ஸ்காட் சவுத்வேல்சிலுள்ள பெல்மான்ட் சாலையில் ஸ்கூட்டரில் இணைத்து படகு ஒன்றை
துறைமுகத்திற்கு கொண்டு சென்றது உலகமெங்கும் வைரலாகியுள்ளது. சாலையில் படகை கொண்டு
செல்ல, ஷேனின் லைசென்ஸ் காலாவதியானதுதான் காரணம். இவரைப் பார்க்க கூட்டம் குவிந்து
ட்ராஃபிக் சிக்கலாக போலீஸ் இவரை கைது செய்தது. அபராத தொகையை யோசித்து வருகிறது போலீஸ்துறை.
குடையை மடக்குங்க அதிபரே!
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியானாபோலீசில்
நடந்த பேரணியில் கலந்துகொண்டார். கிளம்பும்போது குடையைப் பயன்படுத்தியவர், விமானத்தில்
ஏறும்போது அதனை எப்படி மடக்குவது என தெரியாமல் கீழே போட்டுவிட்டு சென்றது உலகெங்கும்
வைரலாகிவருகிறது. அமெரிக்க அதிபருக்கு குடையை மடக்கத் தெரியவில்லை என வீடியோமீம் வடிவ
கிண்டல், கேலிகள் இணையத்தை அதிரவைத்துள்ளன.
குட்டி ஹிட்லர் ரெடி!
அமெரிக்காவின் கென்டக்கியைச் சேர்ந்த
நகைக்கடைக்காரர் பிரான்ட் கோல்ட்பாச், ஹாலாவீன் திருவிழாவில் தன் தனித்துவத்தை காட்ட
மகனுக்கு ஹிட்லர் கெட்அப் போட்டு, தானும் நாஜி வீரராக போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.
உடனே புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பகிர, உலகமே டென்ஷனாகி ஹிட்லர் வேஷம் தப்பு என கமெண்டுகள்
எகிறின. வேறுவழியின்றி பதிவுகளை அழித்துவிட்டு ஹிட்லர் கெட்அப் தப்புதான் என மன்னிப்பு
கேட்டுவிட்டார் பிரான்ட்.