கண்காணிக்கும் துப்பறிவாளர்கள்! -அந்தரங்கம் உஷார்
நவீன ஒற்றர்கள் கண்காணிக்கிறார்கள்!
- ச.அன்பரசு
திருமணம், வேலை, வங்கிக்கடன்
என அனைத்துக்கும் வாய்வார்த்தையை நம்பிய காலமும் இருந்தது. ஆனால் வணிக தந்திரங்கள்,மோசடிகள்
நம்பிக்கையை உடைக்க உண்மையை அறிய ஒற்றர்கள் உருவானார்கள். கூகுள், ஃபேஸ்புக் கம்பெனிகள்
விளம்பரதாரர்களுக்கு காட்டும் விசுவாசத்தைப் போலவே தனியார் டிடெக்டிவ்களும் காசு தரும்
கஸ்டமர்களுக்கு ஏற்ப விசுவாசமாக பலரையும் பின்தொடர்ந்து
துப்பு சேகரித்து வருகின்றனர்.
இந்தியாவின் தலைநகரான டெல்லியில்
மட்டும் சுபாவின் ஈகிள்ஸ் ஐ ரகத்தில் 3 ஆயிரத்து 500 டிடெக்டிவ் ஏஜன்சிகள் கொடுத்த
அசைன்மென்டுகள்படி விறுவிறுவென தகவல் சேகரித்து பிராஃபிட்டை உயர்த்தி வருகின்றன. டெல்லியிலுள்ள
துப்பறிவாளர்கள் சங்கத்தில் 600 உறுப்பினர்கள் உண்டு என்றாலும் பதிவு செய்யாதவர்கள்
மிக அதிகம். மனைவி அல்லது கணவரை உளவறிவது, திருமண விசாரணை, டீன்ஏஜ் மகளை கண்காணிப்பது,
வாராக்கடன் வசூல் தகவல்கள், கம்பெனி மோசடி ஆகியவற்றை துப்பு துலக்கும் டிடெக்டிவ் அமைப்பின்
லீடர்கள் அனைவரும் முன்னாள் ராணுவம் அல்லது போலீஸ்துறையைச் சேர்ந்தவர்கள்தான். இவர்களுக்கான
கேஸ்களும் காவல்துறை நண்பர்கள் மூலமே கிடைத்துவிட கவலையென்ன? "பார்வையற்ற, காதுகேட்காத
ஏன் பிச்சைக்காரியாகவும் நடித்து உளவு பார்த்துள்ளேன்" என்கிறார் இந்தியாவின்
முதல் பெண் துப்பறிவாளரான ரஜனி பண்டிட்.
ரஜனி பண்டிட் |
அண்மையில் வாராக்கடன் விவகாரத்தில்
சர்ச்சைக்குள்ளான பொதுத்துறை வங்கி, கடன்தொகைகளை வசூலிக்க டிடெக்டிவ் ஏஜன்சிகளை ஏலமிட்டு
தேர்ந்தெடுத்துள்ளது. இத் திட்டம் ஹிட்டானால் துப்பறியும் அமைப்புக்கு ஒரு லட்சத்து
50 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்."எங்களது டிடெக்டிவ் அமைப்பிற்கான நிரந்தர வருமானம்,
செக்யூரிட்டிகளை கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியமர்த்துவதில் கிடைக்கிறது.
பல்வேறு டிடெக்டிவ் நிறுவனங்களும்
கணியன் பூங்குன்றன் ரகத்தில் ஒரே பணி என்று இயங்காமல் செக்யூரிட்டி சேவைகளையும் கார்ப்பரேட்
நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறார்கள்.
"2008 ஆம் ஆண்டு பொருளாதார மந்தநிலை காலத்திலிருந்து
டிடெக்டிவ் தொழில் சூடுபிடித்துவருகிறது" என்கிறார் குளோபல் டிடெக்டிவ் நிறுவனத்
தலைவரான விவேக்குமார். 1999 ஆம் ஆண்டு குன்வர் விக்ரம்சிங் எனும் டிடெக்டிவ், சிங்கப்பூரைச்
சேர்ந்த கிரடிட் கார்டு ஊழல் குற்றவாளி, சால்வந்த் சிங் என்பவரை போலீசில் பிடித்துகொடுத்து
இன்வெஸ்டிகேட்டர் ஆப் தி இயர் என்ற விருதே பெற்றார். விக்ரம் சிங் துப்புதுலக்கிய வழக்கை
மையமாக வைத்து The Case of the Missing
Servant" (2009)- Tarnquin Hall' என்ற
மர்மநாவல் வெளியாகியுள்ளது.
"ஆந்திராவில் கழுதைகள் காணாமல் போனது, கிர்லோஸ்கர் நிறுவனத்தின் வியாபார ரகசியங்கள் கசிந்தது உள்ளிட்ட வழக்குகள் பெரும் சவால் தந்தவை" புன்னகையுடன் பேசுகிறார் ஷார்ப் டிடெக்டிவ் நிறுவனத்தின் இயக்குநரான கிரி. காவல்துறை அதிகாரிகள் டிடெக்டிவ்களோடு இணைந்து வேலை செய்வதில்லை என மறுத்தாலும் பல்வேறு தீராத வழக்குகளை கைமாற்றிவிடுவதே அவர்கள்தான் என கிசுகிசுக்கிறது காவல்துறை வட்டாரம். சிறந்த துப்பறிவாளராக நரேந்திரன்-வைஜயந்தி, விவேக்-விஷ்ணு, பரத்- சுசீலா போல நொடியில் மாற நினைப்பவர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயில் பயிற்சி வகுப்புகளும் நடத்தும் இன்ஸ்டிடியூட்கள் உருவாகிவிட்டன. ட்ரெய்னியாக வேலைக்கு சேர்பவர்களுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.
"ஒரு கம்பெனியில் வேலை பார்த்தபடி அங்குள்ள ரகசியங்களை போட்டியாளர்களுக்கு
விற்கும் துரோகங்களை அறிவதுதான் மிகவும் கஷ்டம்" என்கிறார் டிடெக்டிவ் விவேக்குமார்.
சாஃப்ட்வேர்களை பயன்படுத்தி உளவறிவது, நீண்டகால நிதிமோசடிகள் ஆகியவை நவீன துப்பறிவாளர்களுக்கு
சவாலாக மாறிவருகின்றன. ஆடிட் நிறுவனங்களான KPMG,
Deloitte and E&Y ஆகியவை நிறுவனங்களில் ஏற்படும் மோசடிகளைத் தடுக்க ஃபாரன்சிக், சட்டம் உள்ளிட்ட புலனாய்வு துறைகளை
பராமரித்து வருகின்றன. இதில் கேபிஎம்ஜி நிறுவனம், காமன்வெல்த் விளையாட்டு, சத்யம் ஊழல்
ஆகியவற்றை புலனாய்வு செய்த பெருமை கொண்டது.
கமர்ஷியல் வேலை என்றாலும்
இஷ்டத்திற்கு துப்பு துலக்குவதால் மற்றவர்களுடைய பிரைவசி பறிபோகும் பிரச்னை துப்பறிவதில்
உண்டு. "பிறரை துப்பறிவதில் டிடெக்டிவ்கள் செய்யும் குற்றங்களுக்கு நிச்சயம் தண்டனை
உண்டு" எனும் மும்பை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் பிரசாந்த் மாலியின் வாதம் சரி என்பதுபோல,
இவ்வாண்டில் பனிரெண்டு துப்பறிவாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோல
வழக்கொன்றில் துப்பறிவாளர் ரஜனி பண்டிட் சிக்கி நாற்பது நாட்கள் சிறைவாசம் அனுபவித்த
வரலாறும் உண்டு. துப்பறிவு அமைப்புகளுக்கான முறைப்படுத்தல் சட்டம்(2007) இன்னும் அமுல்படுத்தப்படாததால்
மழைக்காளன்களாய் எழும் டிடெக்டிவ் ஏஜன்சிகளை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கார்ப்பரேட் டிடெக்டிவ்!
நிதி தொடர்பான சிஏ/எம்பிஏ
படிப்பு அல்லது கணினி அறிவியல் டிகிரி.
ஃபாரன்சிக் அக்கவுண்டிங்
மற்றும் சைபர் ஃபாரன்சிக் படிப்பு.
வழக்குகளில் உள்ள ஒட்டைகளை
கண்டுபிடித்து அணுகுமளவு அனுபவம்.
இவன் துப்பறிவாளன்!
மழையோ, வெயிலோ தேவையான துப்புக்காக
காத்திருக்கும் பொறுமை அவசியம். பிற மக்களோடு எளிதில் கலந்துவிடும் முகமும் உடையும்
துப்பறிவாளருக்கு அவசியம். போலீஸ் அதிகாரிகள், கடைக்காரர் என பலரிடமும் கலந்துபேசும்
பழக்கம் அதிஅவசியம். துப்பறிவாளருக்கு சட்டரீதியான பாதுகாப்பைவிட அவரின் அறிவே உயிர்காக்கும்
ஆயுதம்.
பாக்ஸ் 3
உளவு பிஸினஸ்!
ஆண்டு வருமானம்- 30 கோடி(சராசரியாக)
மாதவருமானம் - 5-10 ஆயிரம்(பயிற்சியாளர்),
2 ஆயிரம்(ப்ரீலான்சர்)
பணியாளர்களின் எண்ணிக்கை-
15 ஆயிரத்திற்கு மேல்
தகவல்கள் ஆதாரம்:
business
standard/Private affairs 30.6.2018